ரமேஷ் சாவில் மர்மம் உள்ளது என்கிறார் போலீஸ் கமிஷ்னர்
சென்னை:
ஸ்டாலின் நண்பர் ரமேஷ் சாவில் உள்ள மர்மங்கள் விரைவில் அவிழ்க்கப்படும் என்று சென்னை போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது முத்துக்கருப்பன் கூறியதாவது,
கடந்த திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்ட அண்ணாநகர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சாவில்மர்மங்கள் உள்ளதாகத் தெரிகிறது.
ரமேஷ் வீட்டில் சிக்கிய கடிதத்திலும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரமேஷ் படித்தவர். ஆனால் அந்தக் கடிதத்தில்நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.
எனவே அது ரமேஷின் கையெழுத்து தானா என்பதை ஆராய அந்தக் கடித நகல், கோர்ட் மூலம் தடயவியல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கடிதத்தில் எந்தவிதமான சொந்த பிரச்சனைகள் பற்றியோ, செய்த தவறுக்கு வருந்தியோ எதுவும்இல்லை. முற்றிலும் அரசியல் சார்ந்த பிரச்சனைகளாகவே உள்ளன.
மேலும் அது, தனது 3 குழந்தைகளை பறிகொடுக்கும் ஒரு தந்தையின் கடிதமாகத் தெரியவில்லை. நன்றாகஆராய்ந்து எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.
அதேபோல, 5 பிணங்களும் கட்டிலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல இருந்தது. மேலும் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு, அவர் தனது 3 குழந்தைகளையும் பெங்களூரில் ஒரு பள்ளியில் சேர்த்து விடத்திட்டமிட்டிருந்தார்.
ஒருவார இடைவெளியில் எப்படி ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட முடியும்?. இதுவும் சந்தேகத்தைக்கிளப்பியுள்ளது. பிரேத பரி சோதனை அறிக்கைவந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications