ஜெ. முதல்வரானதை எதிர்க்கும் வழக்கில் திமுகவும் சேர்ந்தது
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கில், தன்னையும் ஒரு வாதியாக திமுகசேர்த்துக் கொண்டுள்ளது என்று திமுகவின் தலைவர் கருணாநிதி புதன்கிழமை கூறினார்.
இதை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வரும் ஜூலை 20ம் தேதி இந்த வழக்கின் மீதானவிசாரணை வருகிறது. 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் திமுக தம்மையும் ஒரு வாதியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது என்று கருணாநிதிகூறினார்.
வழக்கை விரைந்து முடிக்குமாறு திமுக வற்புறுத்துமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, "அதை வழக்கறிஞர்கள் தங்கள்வாதத்தில் தெரிவிப்பார்கள்" என்றார் கருணாநிதி.
அரசியலாக்குகிறார் கருணாநிதி என்கிறார் ஜெ.:
இந்த வழக்கில் திமுகவும் தன்னை வாதியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது பற்றி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம்கேட்டபோது, "இந்த விஷயத்தை திமுகவினர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அதுதான் அவர்கள் விருப்பம்என்றால் செய்யட்டுமே" என்று கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications