84 தமிழக மீனவர்களை கடத்திய ஆந்திர மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை காசி மேடு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 84 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் கடத்திச்சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக கடலில் வந்துகொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் இது எங்கள் எல்லை,அதில் நீங்கள் எப்படி மீன் பிடிக்கலாம் என்று அந்த 84 பேரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
14 படகில் சென்ற 84 பேரையும் கடத்தி ராமக்குப்பம் என்ற இடத்தில் (நெல்லூர் மாவட்டம்) தங்கவைத்துள்ளதாகக்கூறப்படுகிறது.
அவர்களை மீட்க மீனவர் சங்க பிரதிநிதிகள் இன்று ராமக்குப்பம் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் இதே கும்பல் தான் 36 மீனவர்களையும் 6 படகுகளையும் கடத்திச் சென்றது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications