விடுதலைப் புலிகளின் படகுகள் குண்டு வீசி தகர்ப்பு
கொழும்பு:
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் 8 படகுகள் புதன்கிழமை காலை குண்டு வீசிதகர்க்கப்பட்டன.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணரத்னே கூறும்போது:
முல்லைதீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் படகுகள் நடமாட்டத்தை இலங்கைக் கடற்படையின் ரோந்துபடையினர் கண்டு பிடித்தனர். இவ்விஷயம் உடனே விமானப்படைக்கு தெரிவிக்கப்பட்டது.
விரைந்து பறந்த விமானப்படையின் போர் விமானங்கள், இந்த படகுகளின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின.இந்தக் குண்டுவீச்சில், அனைத்து 8 படகுகளும் உருத்தெரியாமல் அழிந்து போயின.
இறந்தவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்துவிவரம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகமான உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவான கடற்புலிகள், இந்த படகுகளில் அதிக அளவிலான ஆயுதங்களை எடுத்துச்சென்றிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றார் கருணரத்னே.
விடுதலைப் புலிகள், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைத்தீவு கடல் பகுதி வழியாக சிறு படகுகளை அனுப்பிதங்களுக்கு தேவையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றைக் கடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications