அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி இந்தியா வருகை
டெல்லி:
அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தலைவரான ஜெனரல் ஹென்றி ஷெல்டன் இன்று (புதன்கிழமை) இந்தியாவருகிறார்.
முந்தய அமெரிக்க அரசுகள் அனைத்தும் இந்தியாவை விட பாகிஸ்தானுடன் தான் அதிக நட்புறவு வைத்திருந்தனர்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆட்சிக்காலத்தின் இறுதி கட்டத்தில் பாகிஸ்தானில் பர்வேஷ் முஷாரப் ராணுவஉதவியுடன் ஆட்சியைப் பிடித்தார். அதன் பின்னர் தான் இந்திய - அமெரிக்க உறவு வலுவடைந்தது.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவதில்லை. ஆனால், இங்கிலாந்து போன்ற நாடுகளில்வாங்கப்படும் ஆயுதங்கள் பெரும்பாலும் அமெரிக்கத் தயாரிப்புகள் தான். இந்த ஆயுதங்களுக்கு தேவையானஉதிரி பாகங்கள் அமெரிக்க ராணுவத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தான் வரவேண்டும்.
போக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்திருந்தது.எனவே, பிரிடிஷிடம் நாம் வாங்கிய "ஸீ ஹாரியர்" மற்றும் "ஸீ கிங்" ரக விமானங்களை சர்வீஸ் செய்யமுடியாமலிருந்தது.
ஆனால் சமீப காலமாக அமெரிக்க - இந்திய ராணுவ உறவை மேம்படுத்துவதில் 2 நாடுகளும் ஆர்வமாக உள்ளன.2 நாடுகளும் இணைந்து பல ராணுவப் பயிற்சிகளிலும், கூட்டு முயற்சிகளிலும் இறங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications