இந்தியாவில் இன்டர் நெட் மூலமும் தபால் சேவை
சென்னை:
நாட்டில் பெருகிவரும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மற்றொரு மைல் கல்லாக இந்திய தபால் துறை விரைவில்ஸ்பீட் நெட் என அழைக்கப்படும் புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் இன்டர்நெட்உதவியுடன் இந்தியாவுக்குள் தபால்களை டெலிவரி செய்ய முடியும்.
இந்தியாவில் இப்போதுதான் முதல் முறையாக இது செயல்படுத்தப்பட உள்ளது. இது இன்னமும் சோதனைகட்டத்தில்தான் இருக்கிறது. சோதனை வெற்றிகரமாக முடிந்தபின் நாட்டின் 120 ஸ்பீட் போஸ்ட் மையங்களில்இந்த முறை அமல்படுத்தப்படும்.
இந்த ஸ்பீட் நெட் திட்டம் மைசூரில் உள்ள தபால்துறை பயிற்சி மையத்தில் உள்ள தொழில்நுட்ப மையத்தில்இருக்கும் சாப்ட்வேர் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது.
இணைக்கப்படவுள்ள 120 ஸ்பீட் போஸ்ட் மையங்களிலேயே புக்கிங், டெலிவரி எல்லாம் செய்ய முடியும்.இதற்கென ஒவ்வொரு மையத்திலும் உள்ள மேலாளர் ஒரு இன்டர்நெட் அக்கவுண்ட் வைத்திருப்பார்.
தபால் பதிவு மையங்களில், பதிவு செய்யப்படும் தபால்களுக்கு பார்கோடு எண்கள் என்ற எண்கள் தபால் பதிவுசெய்யும் கவுண்டரில் கொடுக்கப்படும். இவை சோதனை முறையை எளிதாக்கும்.அதன்பின் செய்தி இன்டர்நெட்டுக்கு கொடுக்கப்படும்.
பார்கோட் எண்ணை உபயோகப்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் செய்தியைநெட்டில் படித்து தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் செய்தியையோ, பொருளையோ அனுப்பியவர் யார்,எங்கிருந்து அனுப்பி உள்ளார், எத்தனை மணிக்கு அனுப்பினார் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவரங்கள் அனைத்தும் இன்டர் நெட்டில் 1 மாத காலத்திற்கு பாதுகாத்து வைக்கப்படும், அதன் பின்ஆர்கைவ்ஸ் என அழைக்கப்படும் பழைய செய்திகளை சேகரித்து வைக்கப்படும் பகுதியில் 1 வருட காலத்திற்குவைக்கப்பட்டிருக்கும் என்றார் ஜான் சாமுவேல்.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications