கருணாநிதியை பாதுகாக்க வந்த கருப்புப் பூனைகள்
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதா அரசு மீது கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்காமல்மத்திய அரசு சாப்ட்டாக நடந்து கொண்டது திமுகவை ரொம்பவே வெறுப்படைய வைத்திருக்கிறது.
ஆனால், திமுகவுக்கு இணையான எம்.பிக்களை வைத்துள்ள ஜெயலலிதாவைப் பகைத்துக் கொள்ள மத்திய அரசுதயாராக இல்லை. ராஜ்யசபாவில் திமுக 5 எம்.பிக்களை இழந்துள்ள நிலையில் அதிமுகவின் கணக்கில் 5 எம்.பிக்கள்கூடியுள்ளனர்.
மத்திய அரசின் நிலைமை அப்படி ஒன்றும் பலமிக்கதாய் இல்லை. ஒவ்வொரு எம்.பியும் முக்கியம் என்ற நிலையில்தான் அரசு ஓடிக் கொண்டிருக்கிறது.
இது தவிர பா.ஜ.கவின் ஒரிஜினல் முகமான விஸ்வ ஹிந்து பரிஷத்தில் ஜெயலலிதாவுக்கு எப்போதுமே சாப்ட்கார்னர் உண்டு. கருணாநிதி விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு அதிகம் நெருக்குதல் தர வேண்டாம் என்று மத்தியஅரசுக்கு வி.எச்.பி. நெருக்குதல் தந்து கொண்டிருக்கிறது. இதனால் தீவிரமான நடவடிக்கை எதையும் எடுக்காமல்விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வாஜ்பாய்.
இப்போதைக்கு கருணாநிதி, மாறன், ஸ்டாலின், பாலுவை அதிமுக அரசு விடுவித்திருந்தாலும் விஷயம் கொஞ்சம்ஆறிய பின்னர் மீண்டும் கருணாநிதி மீது ஜெயலலிதா போலீசாரை ஏவி விடலாம் என்று திமுக தரப்பில்கருதுகின்றனர்.
என்.எஸ்.ஜி. பாதுகாப்பு:
இதையடுத்து தமிழக போலீசாரால் மீண்டும் டச் செய்ய முடியாத அளவுக்கு உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு மாறன் மூலமாக கோரிக்கை அனுப்பினார் கருணாநிதி.
மாறன், பாலு இருவரும் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின்ஒருங்கிமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு நெருக்குதல் தர இப்போது கருணாநிதிக்கு மத்தியஅரசின் சிறப்புப் பாதுகாப்புப் படையின் (நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்-என்.எஸ்.ஜி.) பாதுகாப்புத் தர மத்தியஅரசு முன் வந்துள்ளது.
என்.எஸ்.ஜி. சார்பில் கருணாநிதிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. கருப்புப் பூனைகள் எனப்படும்இந்தப் படையினர் மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோர் தமிழகம் வரும்போது அவர்களுக்கும்பாதுகாப்பு வழங்கும்.
தமிழக போலீசாரால் கருணாநிதியை இனி நினைத்தபோதெல்லாம் கைது செய்ய முடியாது. அதே மாதிரி தான்பாலு, மாறனையும் கைது செய்ய முடியாது. கைது செய்ய நீதிமன்ற வாரண்ட் இருந்தால் மட்டுமே இனி கருணாநிதி,பாலு, மாறனை மாநில போலீசாரால் நெருங்க முடியும்.
மாநில போலீஸ் விளையாட முடியாது:
மீறி நெருங்கினால், என்.எஸ்.ஜி. படையினரின் எதிர்ப்பை போலீஸ் சந்திக்க வேண்டி வரும். என்.எஸ்.ஜியிடம்போலீஸ் விளையாட முடியாது.
கமாண்டோ தாக்குதல், அனைத்து ரக துப்பாக்கிகளைக் கையாளுதல், வெறும் கையால் கூட்டத்தைக்கட்டுப்படுத்துதல், எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருத்தல்... இது தான் என்.எஸ்.ஜி. படை.நேரடியாக மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பவர்புல் படை. இவர்களிடம் மோதுவதும்மத்திய அரசிடம் நேரடியாக மோதுவதும் ஒன்று தான்.
கருணாநிதியை ஜெயலலிதா இனி நெருங்கிவிடாமல் இந்தப் படையினர் பார்த்துக் கொள்வர்.
கருணாநிதிக்கு 24 மணி நேரமும் இவர்கள் பாதுகாப்பு தருவர். ஷிப்ட் முறையில் ஒவ்வொரு ஷிப்டிலும்குறைந்தபட்சம் 15 கருப்புப் பூனைகள் இருப்பர். கருணாநிதியின் பாதுகாப்புக்காக 54 கருப்புப் பூனைகள்சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெள்ளிக்கிழமையே கருணாநிதிக்கு பாதுகாப்புப் தர ஆரம்பித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications