உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிப்பில்லை: கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தி.மு.கவையும் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாதது தி.மு.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் எனக்கு வரவில்லை. அரசியல் கட்சிகளை இந்த வழக்கில் சேர்த்து அரசியல் சாயம்பூசவேண்டாம் என்றுதான் நீதிபதி கூறியுள்ளார். இது தி.மு.கவுக்கு பின்னடைவு இல்லை.
எனக்கு பாதுகாப்பு தருமாறு மத்திய அரசிடம் நான் கேட்கவில்லை. மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும்,டி.ஆர். பாலுவும் கேட்டிருக்க்ககூடும்.
நான் கைது செய்யப்பட்டபோது, போலீசார் நடந்து கொண்ட விதத்திற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக, என்னைத் திருப்திபடுத்த மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கிறதுஎன கூறப்பட்டுவருகிறது. இது போன்ற கேள்விக்கெல்லாம் நான் பதில் கூறவிரும்பவில்லை.
தி.மு.க. கேட்டுக் கொண்டது போல் அ.தி.மு.க. அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்தும்நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
சென்னை நகர மேயர் ஸ்டாலினின் நண்பர் தற்கொலை செய்து கொண்ட போது எழுதிய கடிதத்தின் பின்னணியில்யாரோ இருக்கிறார்கள் என போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார். அவருக்குப் பின்னால் யார்இருக்கிறார்கள் என எனக்குத் தெரியும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications