கண்ணாடியைக் கண்டு மதிமயங்கிய மனிதக்குரங்குகள்
லக்னோ:
கண்ணாடியைப் பயன்படுத்தி, லக்னோ மிருகக் காட்சிச் சாலையிலுள்ள 2 மனிதக்குரங்குகளிடம் இருந்த தனிமைஉணர்வைப் போக்க ருசிகர ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.
இந்தப் பிரச்சனைகளுக்கு முடிவுகட்டுவதற்காக, லக்னோ மிருகக் காட்சிச் சாலையில் ஆராய்ச்சிமேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி மிருகக் காட்சிச் சாலை அதிகாரி பிரபாகர் கூறியதாவது:
"சன்னி" மற்றும் "சீனா" என்ற 2 மனிதக் குரங்குகள் தனித்தனியே 2 கூண்டுகளில் அடைக்கப்பட்டன. அந்தக்கூண்டுகளில் 2 பெரிய கண்ணாடிகளை ஆராய்ச்சியாளர்கள் வைத்தனர்.
கண்ணாடியில் தெரியும் தமது பிம்பத்தைப் பார்த்து தன்னுடன் ஒரு துணையிருப்பதாக எண்ணின அந்தக்குரங்குகள். அதனால் சந்தோசமடைந்த குரங்குகள் அந்த பிம்பத்தோடு விளையாட ஆரம்பித்தன. இப்போது அவைஇரண்டும் தங்கள் தனிமை உணர்வை மறந்து நன்றாகச் சாப்பிடுகின்றன என்று பிரபாகர் தெரிவித்தார்.
இதுபோன்ற பல நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு விலங்குகளின் குணாதிசயங்களை ஆராய்ந்துவருவதாகவும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications