கடிதங்களில் முரண்பாடுகள் உள்ளன: கமிஷனர்
சென்னை:
ரமேஷ் எழுதிய 2 கடிதங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறியுள்ளார்.
ரமேஷ் தனது குடும்பத்துடன் இறந்தது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது. அந்தத் துக்கத்தில் நாங்களும்பங்கெடுத்துக் கொள்கிறோம்.
இந்த பிரச்சனையில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனாலும், தீவிர விசாரனை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம். பத்திரிக்கைகளும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
ரமேஷ் எழுதியதாக வெளியிடப்பட்ட 2 கடிதங்களிலும் முரண்பாடுகள் உள்ளன.அவை இரண்டும் ரமேஷ் எழுதியதுதானா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
ரமேஷ் இறந்த அன்று ஒரு கடிதம்தான் கொடுக்கப் பட்டது. பிறகு போலீசார் நடத்தியசோதனையில் கிடைக்காத கடிதம், 72 மணி நேரம் கழித்து வெளியிடப்பட்டு உள்ளது.அந்தக் கடிதத்தை முதலில் போலீசாரிடம் கொடுக்காமல், பத்திரிக்கைகளுக்குக்கொடுத்துள்ளனர்.
15ந்தேதி எழுதியதாகக் கூறப்பட்ட முதல் கடிதத்தில் ரமேஷ், தெய்வசிகாமணியைஎனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஆனால், 13ந்தேதி எழுதியதாகக் கூறப்படும் 2 வது கடிதத்தில், தெய்வசிகாமணியைப்பற்றி நிறைய தகவல்களைக் கூறியிருக்கிறார். அதாவது தெய்வசிகாமணி, ரூ.ஒன்றரைகோடிக்கான பில்லை மாநகராட்சியிலிருந்து வாங்கியதாகவும் 2 வது கடிதத்தில்கூறியுள்ளார்.
எனவே, கடிதத்தில் உள்ள கைரேகை மற்றும் கையெழுத்து ஆகியவை பற்றி ஆய்வுசெய்ய 2 கடிதங்களையும் கோர்ட் மூலம் தடய அறிவியல் துறைக்குஅனுப்பியுள்ளோம்.
1990-1992 ல் கோவில்பட்டியில் காஞ்சனா பைனான்ஸ் என்ற கம்பெனியை ரமேஷ்நடத்தி வந்தார். அப்போது ரூ 45 லட்சம் மோசடி வழக்கில் முன் ஜாமீன் பெற்றுஇருக்கிறார். எனவே ரமேசுக்கு வழக்கு விசாரணை ஒன்றும் புதிது அல்ல.
இந்தச் சம்பவம் குறித்துத் திறந்த மனதுடன், உண்மையாக, எவ்வித பாரபட்சமின்றிவிசாரணை நடக்கிறது. உண்மைகள் கண்டிப்பாக வெளிவரும் என்றார்முத்துக்கருப்பன்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications