பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனிகளின் நிலை ஓ.கே.
பெங்களூர்:
பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனிகளின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு திருப்திகரமாகவே உள்ளது என்றுகூறப்படுகிறது.
கடந்த 6-7 ஆண்டுகளாக இந்தியாவில் சாப்ட்வேர் தொழில் நடந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகஇத்தொழில் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிதான்இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால், பல கம்பெனிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. தற்போதும் "விப்ரோ" போன்ற பெரியகம்பெனிகளில்கூட ஆட்குறைப்பு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும், பல சிறிய சாப்ட்வேர்கம்பெனிகளும் மூடப்பட்டு வருகின்றன.
ஆனால் கர்நாடக மாநிலத்தில், கடந்த 2000-2001 நிதியாண்டில், சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.7,475 கோடி என்றும்,இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இது 35 சதவிகிதம் என்றும் கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்நானையா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி மதிப்பு 2008ல் ரூ.70,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்கா போன்ற பல நாடுகள், அங்கு நிலவும் மார்க்கெட் வீழ்ச்சியால் குறைந்த விலையில் சாப்ட்வேர்களைஉருவாக்கித் தரும் நாடுகளுக்கு காண்டிராக்ட் கொடுக்க விரும்புகின்றன. இதற்கு இந்தியா போன்றநாடுகளைத்தான் பெரிதும் அவர்கள் நம்புகிறார்கள்.
இச்சூழ்நிலையில், பெங்களூரில் மேலும் பல சாப்ட்வேர் கம்பெனிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இதனால் அரசு, பொறியியல் கல்லூரிகளில் இடங்களை 2 மடங்காக்கியுள்ளது என்று கூறினார் நானையா.
யு.என்.ஐ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications