தீவிரவாதிகள் தாக்குதல்: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாத்திரை நடக்கும் வழியில் இரு குண்டுகள் வெடித்ததில் 2 போலீசார் உள்பட 12 பேர் இறந்தனர்.

ஆண்டு தோறும் அமர்நாத் குகைக் கோயிலில் இருக்கும் சிவ பெருமானை தரிசிக்கநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, யாத்திரையில் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் தீவிரவாதிகள்தாக்குதல் காரணமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எல்லை பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி.கூறுகையில், அமர்நாத் குகைக்குஅருகே வெடி குண்டு வெடித்ததில் 2 போலீசார் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 15பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டிலும்ஈடுபட்டனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் யாரும் பாலகாம் முகாமில் இருந்து யாத்திரையை தொடரஅனுமதிக்கப்படவில்லை.

தீவிரவாதிகள் இரண்டு முறை தாக்குதல் நடத்தினர் முதல் தாக்குதல் சனிக்கிழமைஅதிகாலை 1.25 மணிக்கும், இரண்டாவது தாக்குதல் அதிகாலை 1.50க்கும்நடைபெற்றது. பி.எஸ்.எப்.வீரர்கள் சுட்டதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் போலீஸ் டி.எஸ்.பி, சப்- இன்ஸ்பெக்டர் சஃபி அக்பர்என்பவர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். 5 போலீசார் உள்ளிட்ட 15 பேர்காயமடைந்தனர்.

பாதுகாப்பு காரணமாக அமர்நாத்தில் தரிசனம் முடிந்து திரும்பி வரும் யாத்ரிகர்களும்பாலகாம் திரும்பி வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள்அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கடைசியாக கிடைத்த தகவலின் படி தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.உயர் ராணுவ அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக தாக்குதல் நடந்தஇடத்திற்கு விரைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களிலும், காயமடைந்தவர்களிலும் யாத்ரிகர்களும்அடங்குவார்களா என்று இப்போது கூற முடியாது. கொல்லப்பட்டவர்கள் கூலிப்பணியாளர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சிவபெருமானின் வெள்ளி சூலம்சங்கராச்சார்யர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீபேந்திர கிரி மகானால்எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சூலத்திற்கு பல சாதுக்களாலும் பூஜை நடத்தப்பட்டது.

இந்நிலையில் முன்னர் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்த இருந்ததாக்குதலை முறியடித்ததாக பி.எஸ்.எப். வீரர்கள் கூறினர். 2 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள்கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+