சமரசம் செய்ய ஆசாத் சென்னை வந்தார்
சென்னை:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தீர்த்து வைக்க அகில இந்தியகாங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் சனிக்கிழமை சென்னை வந்தார்.
இதைத் தொடங்கி வைத்தவர் இளங்கோவன்.
இவர், சென்னையில் நடந்த காமராஜர் விழாவில், திராவிடக் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதுஎன்று பேசிவைத்தார்.
இதைக்கேட்டவுடன் சூடான அதிமுக, செங்கோட்டையனை ஏவி தாக்குதல் அறிக்கை விட்டது.
பிறகு, இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத்தும்,"இளங்கோவனைப் பெற்றதற்காக வருத்தப் படுகிறேன்",என்று கூறினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் ஐயர், இளங்கோவனை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர முடியும் என்கிற ரீதியில் பேட்டி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, டெல்லியிலிருந்து இளங்கோவனுக்கு அழைப்பு வந்தது. இந்த 2 கட்சிகளிடையே நிலவும்கருத்து வேறுபாட்டைக் களைய வேண்டுமென காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்தது.
இதற்காக குலாம் நபி ஆசாத்தை சென்னைக்கு அனுப்பி வைத்தார் சோனியா.
இன்று சென்னை வந்திறங்கிய ஆசாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாங்கள் அதிமுக -காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும்என்று நினைக்கிறோம். ஆனால் மாநில காங்கிரஸ் தவைவர்களின் பேச்சுக்குபதில் தரும் பேட்டியில் தேவையில்லாமல் சோனியாவின் பெயரை இழுக்காமல் இருக்குமாறு அதிமுகதலைவர்களுக்கு அக்கட்சித் தலைமை கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அதிமுக தலைவர்செங்கோட்டையனின் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமானது. வருத்தமாக உள்ளது.
மேலும் தமிழகத்தில் மனித உரிமை மீறல் இருப்பதாக சோனியா கூறவில்லை ".
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் மூப்பனாரைச் சந்தித்தார்.
மேலும் இவர், காங்கிரஸ் தலைவர்களையும், அதிமுக தலைவி ஜெயலலிதாவையும் சந்தித்து பேச்சு நடத்தவார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications