சன் டிவியை தடை செய்ய ஜெ. பேரவை கோரிக்கை
சென்னை:
சன் டிவியின் ஒளிபரப்பை தடை செய்யவேண்டும் என ஜெயலலிதா பேரவை மத்தியஅரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
அ.தி. மு.க. அவைத்தலைவர் புலமைப்பித்தன், மூத்த கட்சி உறுப்பினர்கள் மற்றும்அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டுவரும் சன் டிவிவேண்டுமென்றே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டசம்பவத்தை குறித்த தவறான தகவல்களை கொடுத்து வருகிறது.
கருணாநிதி தன்னை கைது செய்ய வந்த போலீசாருடன் அவர் ஒத்துழைக்க மறுத்தார்.அது சன் டிவியில் காட்டப்படவில்லை.
மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் போலீசாரைதாக்கினர். மேலும் அவர்கள் போலீசாரை தங்கள் கடமையை செய்யவிடாமல்தடுத்தனர். இதையும் சன் டிவி காட்டவில்லை. போலீசைத் தாக்கிய இந்த இருவர் மீதும்மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான தகவல்களை கொடுத்து வன்முறையை தூண்டும் சன் டிவி ஒளிபரப்பை மத்தியஅரசு தடை செய்ய தடை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications