கணேசன் to சிவாஜி கணேசன்
நடிப்பில் இமயத்தைத் தொட்டவர் சிவாஜி கணேசன். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் 6 வயதில் வீட்டை விட்டுஓடி நாடக கம்பெனியில் சேர்ந்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையைச் சேர்ந்தது இவரது குடும்பம். இவரது தந்தை சின்னைய்யா. தாயார்ராஜாமணி அம்மாள். சின்னைய்யா-ராஜாமணி தம்பதி சீர்காழியில் வசித்தபோது பிறந்தவர் சிவாஜி கணேசன்.பின்னர் சின்னைய்யா விழுப்புரத்துக்குக் குடி பெயர்ந்தார்.
6 வயதான (சிவாஜி) கணேசன் அந்தப் பகுதிக்கு வந்த நடமாடும் நாடகக் குழுவில் போய் சேர்ந்தார். ஒருவெள்ளைக்கார போர் வீரனாக சின்ன வேஷம். தனது மகன் நாடகத்தில் நடிப்பதை, அதிலும் ஒரு வெள்ளைக்காரவீரனாக நடித்ததைக் கண்டு கோபமடைந்த இவரது தந்தை கணேசனை அடித்தார்.
தாய்-தந்தையரைவிட தனக்கு நடிப்பு தான் முக்கியம் எனக் கருதிய சிவாஜி அந்த வயதிலேயே வீட்டை விட்டுவெளியேறினார். திருச்சி அருகே நாடகம் போட்டுக் கொண்டிருந்த யாதாரத்தினம் பொன்னுசாமி அண்ட்கம்பெனியின் நாடகக் குழுவில் போய் சேர்ந்தார்.
தன்னை ஒரு அனாதை என்று அறிமுகப்படுத்திக் கொண்ட கணேசன், நாடகங்களில் தனக்கு மிகுந்த ஆர்வம்இருப்பதாகவும் கூற உடனடியாக அவரை ஆதரித்து தனது குழுவில் சேர்த்துக் கொண்டார் பொன்னுசாமி.
அங்கு நடிப்பு மட்டுமல்லாமல், பரத நாட்டியம், கதகளி, மணிப்பூரி நடனங்களைக் கற்றுக் கொண்டார். கர்நாடகஇசையையும் கற்றார்.
முதலில் பெண் வேடமிட்டுத் தான் நீண்ட நாட்கள் நாடகங்களில் நடித்து வந்தார்.
அவருக்கு மிகப் பெரிய பெயர் வாங்கித் தந்த நாடகம் அறிஞர் அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்'நாடகம் தான். இதில் கதாநாயகனாக நடிக்க இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். கடைசி நேரத்தில்நடிக்க முடியாமல் போக, கணேசனை நடிக்க அழைத்தனர்.
பேரரசன் சிவாஜி வேடத்தில் கணேசன் நடித்த அந்த நாடகம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த நாடகத்தைப்பார்த்துக் கொண்டிருந்த தந்தை பெரியார் கணேசனின் நடிப்பில் அசந்து போனார். நாடகம் முடிந்தவுடன்மேடையில் ஏறிய அவர் இனி இவன் வெறும் கணேசன் அல்ல, சிவாஜி கணேசன் என்றார். அன்று முதல் கணேசன்,சிவாஜி ஆகிவிட்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications