தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கு அவசியமில்லை: மூப்பனார்
திருச்சி:
தமிழ்நாட்டில் 355, 356 (ஆட்சிக் கலைப்பு)வது சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லைஎன்றும் அதேநேரத்தில் அவைகளை நீக்கவும் கூடாது என்றும் த.மா.கா. தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
இதுபற்றி அனைத்துக்கட்சிகளும் கூடி விவாதித்து, எந்நெந்த சூழ்நிலைகளில் இந்த சட்டப்பிரிவுகளைஅமல்படுத்தலாம் என்று முடிவு செய்யவேண்டும், என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தமிழ்நாட்டில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது மனிதஉரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், "நான் அந்தச் செய்தியை படிக்கவில்லை,மேலும் அவர் "கருணாநிதி" என்று கூறியிருக்கிறாரா? " என்று கேட்டார்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றிக் கூறும்போது, "2 கட்சித் தலைவர்களும் மற்றவருடைய கட்சித் தலைவியைப் பற்றிவிமர்சித்ததால் தான் இந்தப்பிரச்சனை.
தேவைப்பட்டால் இதுபற்றி நான் சோனியா காந்தியுடன் பேசுவேன்", என்றார்.
தமிழ்நாட்டில் காங்கிரசும், த.மா.காவும் மீண்டும் இணைந்து செயல்படுமா என்றுகேட்டதற்கு ,"இப்பொழுது இணைந்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது", என்றுகூறினார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தே.ஜ .கூட்ணியில் சேருமா என்று கேட்டதற்கு,கருத்துக் கூற மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications