மத்திய படையின் பாதுகாப்பு கோரும் அரசு ஊழியர்கள்
சென்னை:
தமிழகத்தில் மத்திய அமைச்சர்களுக்கே பாதுகாப்பு இல்லை. இதனால், தமிழகத்தில்பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சி.ஆர்.பி.எஃப்) பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர்கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது.
மத்திய அமைச்சர்களே சட்ட விரோதமாக, மத்திய அரசின் அனுமதி பெறாமல் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேநட்புறவை ஏற்படுத்தும் அடிப்படை சட்டவிதிகளை தமிழக அரசு மீறி உள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை கட்டளைகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது. தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையைஏற்காமல் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.
மத்திய அமைச்சர்களே சட்டத்திற்கு விரோதமாக கைது செய்யப்ட்டுள்ள நிலையில்தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.எனவே, சி.ஆர். பி.எஃப். (சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு) பாதுகாப்புஅளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications