காஷ்மீர்: முஷாரப் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு உரிய பகுதி என்று பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ்முஷாரப் கூறிய கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் என்றுமே இந்தியாவிற்கு சொந்தமானது. அது இந்தியாவின் ஒரு பகுதிதான், இதில் யாருடனும் சமரசத்துக்கு இந்தியா தயாராக இல்லை எனவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பதில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப் இந்தியப்பயமத்துக்குப் பின் தனது நாட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதற்குஇந்திய பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு இன்ஸ்டன்ட் விசாவும் தந்ததுபாகிஸ்தான்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முஷாரப், ஜம்மு- காஷ்மீர் பிரச்சனைக்கு உரிய பகுதிஎன்று கூறியிருந்தார்.

வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் அத்வானியும், வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அதன் பின்ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பாகிஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்குஉரியது என்று கூறியுள்ளார்.

இது ஏற்க முடியாத கருத்து. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் கிடையாது.

முஷாரப்பின் இந்த கருத்து மூலம் மக்கள் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.முஷாரப்பின் இது போன்ற கருத்துக்கள்தான் ஆக்ரா உச்சி மாநாட்டில் எந்த விதமானஒப்பந்தமும் ஏற்படாததற்கு காரணம் என்பதை மக்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.

எல்லை கடந்த தீவிரவாதம் குறித்து முஷாரப் கூறும் கருத்துக்களும் ஏற்க முடியாதவை.பாகிஸ்தான் ஆதரவுடன் எல்லை கடந்து நடந்துவரும் தீவிரவாதத்திற்கு நாள் தோறும்பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு உரிய பகுதி என்று முஷாரப் கூறுவதை கண்டிப்பாகஏற்க முடியாது. அது இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை உறுதியுடன்தெரிவிக்கிறோம் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+