பங்க்குமாரை விசாரிக்க போலீசுக்கு 4 நாள் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தெய்வசிகாமணியை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ரவுடி "பங்க்" குமாரைவிசாரிப்பதற்காக, 4 நாள் போலீசுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார் நீதிபதி அசோக்குமார்.

கேபிள் டி.விக் காரர்களைக் கடத்திய வழக்கில் கடந்த வாரம் சைதாப் பேட்டையில் சரணடைந்தார் ரெளடி பங்க்குமார். இவர் மீது 7 வழக்குகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது, காண்டிராக்டர் தெய்வசிகாமணியை ரூ.1 கோடிகேட்டு மிரட்டியதாகக் கூறப்பட்ட வழக்கு.

இவ்வழக்கில் தான் மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன், முன்னாள் எம்.பி.பரசுராமன், சமீபத்தில்தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் ஆகியோர் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர்.

இந்நிலையில், ரவுடி பங்க்குமாரை விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார், குமாரை 15 நாள் காவலில் வைக்கவும், அதில் 4 நாள் போலீஸ்விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மேலும், விசாரணையின் போது, குமாருடன் ஒரு வக்கீல் இருக்கலாம் என்றும், ஆனால் வெளியிடங்களுக்கு அவர்அழைத்துச் செல்லுப்படும் போது வக்கீலுக்கு அனுமதியில்லை என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+