கொழும்பு விமான நிலையம் காலவரையறையின்றி மூடல்
கொழும்பு:
கொழும்பு விமான நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச்சேர்ந்த 10 பேரில் 9 பேர் ராணுவத்துடனான சண்டையில் கொல்லப்பட்டதையடுத்து விமான நிலையம் ஒருவழியாய் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
அதிகாலை 4 மணிக்கு விமானப் படைத் தளத்தின் பாதுகாப்பை மீறி விடுதலைப் புலிகள் துப்பாக்கிகள், மார்ட்டர்குண்டுகளை வீசும் ஆயுதங்கள், வெடி பொருள்களுடன் விமானப் படை தளத்துக்குள் நுழைந்தனர்.
ராணுவம் மற்றும் போலீசாரால் மிகத் தீவிரமாகப் பாதுகாக்கப்படும் பகுதிகளில் ஒன்று இந்த விமானப் படைத்தளம். ஆனால், அதையும் மீறி புலிகள் உள்ளே நுழைந்தது அதிபர் உள்பட அனைவரையும் அதிரச் செய்துள்ளது.
விமானப் படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு வீச்சு விமானங்கள், பயிற்சி விமானங்கள்,ஹெலிகாப்டர்களை குண்டு வைத்துத் தகர்த்த புலிகள் அடுத்து அருகாமையில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்குள் ஊடுருவி அங்கு நின்றிருந்த 3 போயிங் விமானங்களை சேதப்படுத்தினர்.
உடனடியாக விமான நிலையத்தை சூழ்ந்து கொண்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் உள்ளே சிக்கியிருந்தபுலிகள் மீது குண்டுமழை பொழிந்தனர்.
புலிகளும் வெகுநேரம் தாக்குப் பிடித்தனர். சுமார் 5 மணி நேரம் இரு தரப்பிலும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இறுதியில் 9 புலிகள் கொல்லப்பட்டனர். புலிகள் தாக்கியதில் 3 விமானப் படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்போது அங்கு துப்பாக்கிச் சூடு நின்றுவிட்டது. ஆனால், விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை சீரமைக்கவே பல நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.
புலிகளின் தாக்குதலில் மொத்தம் 11 விமானங்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில்நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூலை மாதத்தில் தான் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது. ஒரே நாளில்3,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதை நினைவு கூறும் வகையில் தான் புலிகள் இந்தத் தாக்குதலைநடத்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications