கூட்டணிக் கட்சிகளுடன் பேசிய பின்னர் தான் முடிவு: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணிக் கட்சிகளுடன் பேசிய பின்னரே பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேர்ப்போம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. தான் இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது.தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிப்பது திமுக.

தாவி...பல்டி அடித்து...குட்டிக் கரணம் போட்டு:

இந்தக் கூட்டணியில் இருந்த ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுககூட்டணிக்குத் தாவியது. அதற்கு முன் அதிமுக கூட்டணியில் இருந்து தாவி தான் திமுக கூட்டணிக்கு வந்தது.அதற்கும் முன் திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவுக்கு தாவியது.

லேட்டஸ்டாக மீண்டும் அதிமுகவிலிருந்து விலகி திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்சேர்ந்துள்ளது பா.ம.க.

எத்தனை முறை எத்தனைக் கூட்டணிக்கு இந்தக் கட்சி தாவியது என்பது இந்தக் கட்சித் தொண்டர்களுக்கேநினைவிருக்குமா என்பதே சந்தேகம் தான்.

அதிமுகவிலிருந்து விலகி வந்த பா.ம.கவை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி விரும்பவில்லை. ராமதாஸ் மீதான தனது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவேதெளிவுபடுத்தினார்.

கருணாநிதி ஆர்வம்:

ஆனால், அதிமுகவை பலவீனப்படுத்த ராமதாஸ் உதவுவார் என்பதால் அவரை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள கருணாநிதி விரும்பினார். தனது கருத்தை பிரதமர் வாஜ்பாயிடமும் தெரிவித்தார்.

இந் நிலையில் டெல்லிக்கு ஓடினார் ராமதாஸ். பிரதமரைச் சந்தித்து கூட்டணிக்குள் மீண்டும் வர உதவுமாறுகோரினார். பிரதமர் அவரது கோரிக்கையை ஏற்று கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.

உடனடியாக கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராமதாஸை மீண்டும் தான் சேர்த்துக்கொண்டதையும் தெரிவித்தார்.

தமிழகத்தில் குழப்பம்:

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வருவதை திமுக தவிர பிற கூட்டணிக்கட்சியினர் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும் பா.ம.கவை ஏன் சேர்க்க வேண்டும் என்ற ஜனா. கிருஷ்ணமூர்த்தியின்கருத்தைத் தான் மாநில பா.ஜ.கவும் பிரதிபலிக்கிறது. ஆனால், பிரதமரும், கூட்டணியின் தமிழக தலைவருமானகருணாநிதி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம் எனக் கூறிவிட்டது.

இதே போல திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பாட்டாளி மக்கள்கட்சிக்கும் எப்போதுமே ஒத்து வந்தது இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅந்தக் கூட்டணியைவிட்டு விலகியதற்கே அங்கு ராமதாஸ் வந்து சேர்ந்தது தான் காரணம்.

இந் நிலையில் தாங்கள் பாதுகாப்பாக உள்ள திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் வருவதை விடுதலைச் சிறுத்தைகள்விரும்பவில்லை. தலித்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ராமதாஸ் உறுதிமொழி கொடுத்தால் மட்டுமேபா.ம.கவை சேர்க்கலாம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நிபந்தனை விதித்துள்ளார்.

மீண்டும் திமுக கூட்டணிக்குள் நுழைய வேண்டும் என்பதால், திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு பதில் ஏதும்சொல்லாமல் அமைதி காக்கிறார் ராமதாஸ்.

கருணாநிதி பேட்டி:

இந் நிலையில் சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, கூட்டணிக் கட்சிகளுடன் பேசியபின்னர் தான் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ப்போம்.

கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் விலகி விடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் சொல்லவில்லைஎன்பதைக் கூற விரும்புகிறேன். சில நிபந்தனைகளைத் தான் விதித்துள்ளார்.

திருமாவளவன் உள்பட கூட்டணியில் உள்ள பிற கட்சியினருடன் பேசாமல் நான் எந்த முடிவு எடுக்க மாட்டேன்.

என்னை ராமதாஸ் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் வந்து பேசிய பின்னர் தான் இவ்விஷயத்தில்அடுத்து யோசிப்போம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+