சிவாஜிக்கு "பாரத ரத்னா": லதா மங்கேஷ்கர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குப்பரிந்துரை செய்யப் போவதாக பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.
இதையடுத்து, புதன்கிழமை சென்னைக்கு வந்து, சிவாஜியின் வீட்டிற்குச் சென்றார் லதா மங்கேஷ்கர். சிவாஜியின்மனைவி கமலாவிற்கும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறதல் கூறினார் லதா மங்கேஷ்கர்.
அதன் பின்னர் வெளியே வந்த லதா மங்கேஷ்கர், "சிவாஜி என்னுடைய சகோதரர். அவரது மரணம் தனிப்பட்டமுறையில் எனக்குப் பேரிழப்பு. இந்த மாபெரும் கலைஞருக்கு "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும். அந்தவிருதை ஏற்கனவே நான் பெற்றவள் என்ற முறையில், சிவாஜிக்கும் இந்த விருதை வழங்க மத்திய அரசுக்குப்பரிந்துரை செய்வேன்" என்றார்.












Click it and Unblock the Notifications