பா.ம.க. விவகாரம்: கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு
சென்னை:
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி தன்னை இணைத்துக் கொண்டுள்ளதுபற்றி, தமிழக தே.ஜ. கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது.
தன்னுடைய 5 எம்.பிக்களுடன் டெல்லி சென்ற ராமதாஸ், பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோரைச் சந்தித்து, ஒற்றைக் காலில் நின்று, மீண்டும் அக்கூட்டணியில் தன் கட்சியைச் சேர்த்துவிட்டார்.
ஆனால், தமிழகத்தில் இதே கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் ராமதாசின் வருகைக்கு எதிர்ப்புதெரிவித்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்து வருகிறது.
இந்நிலையில், விரைவில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் அனைவரும் கூடி,பாமகவை மீண்டும் கூட்டணியில் சேர்த்தது பற்றி விரைவில் பேசவுள்ளனர்.
இதுகுறித்து, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
பா.ம.கவை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட வாஜ்பாயின் முடிவுக்கு நான் எதிர்ப்புஎதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், கூட்டணியில் மீண்டும் சேர்ந்த பிறகு நான் இன்னும் ராமதாஸைச் சந்திக்கவில்லை. இதுவரை அவர்என்னிடம் இதுகுறித்துப் பேசவும் இல்லை.
இவ் விவகாரம் குறித்து விரைவில் தமிழகத்திலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கூடி திமுகவிவாதிக்கவுள்ளது என்றார் கருணாநிதி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications