பூலன்தேவி கொலை: முக்கியக் குற்றவாளி கைது
டெல்லி:
பூலன்தேவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பங்கஜ் என்ற ஷேர்சிங் ராணா வெள்ளிக்கிழமைபிடிபட்டார்.
டேராடூனில் இவர் பிடிபட்டார். இவருடன் ரவீந்தர் என்ற இன்னொரு நபரும் பிடிபட்டுள்ளார். இருவரும்டெல்லிக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
பூலன்தேவியை சுட்டுக் கொல்ல நாங்கள் தான் ஏற்பாடு செய்தோம் என ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பூலன்தேவி கொல்லப்பட்ட அன்று அவரை காலையில் நாடாளுமன்றத்துக்கு ராணா தான் அழைத்துச் சென்றார்.
பிற்பகலில் பூலன்தேவி இன்னொரு எம்.பியின் காரில் வீட்டுக்குத் திரும்பினார்.
அப்போது ராணாவின் காரிலிருந்து குதித்த 3 பேர் பூலன்தேவியை சுட்டுக் கொன்றனர். இதையடுத்துகொலையாளிகளை ராணா தனது காரிலேயே அங்கிருந்து அழைத்துக் கொண்டு தப்பினார்.
காரை 500 மீட்டர் தூரத்தில் ஓரிடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி ஓடினர்.
இப்போது பங்கஜ் என்ற ராணா பிடிபட்டதன் மூலம் பூலன்தேவியின் கொலைக்கான காரணம் விரைவில்தெரிந்துவிடும்.
ரூர்கி நகரைச் சேர்ந்த ராணா மதுக்கடை உரிமையாளராவார்.
பூலன்தேவி கொலை நடந்த அன்று அவரைச் சந்திக்க ரூர்கியில் இருந்து கஷ்யப் என்பவரும் அவரது மனைவிஉமாவும் வந்தனர். இவர்களை தனது காரில் பூலன்தேவியின் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தவர் ஷேர்சிங் ராணாஎன்ற பங்கஜ் தான்.
பூலன்தேவி கொல்லப்பட்டபோது இந்தத் தம்பதி பூலன் தேவியின் வீட்டில் தான் இருந்தது. இப்போது இந்தத்தம்பதி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில்கொலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு பங்கஜின் கொலைத் திட்டம் குறித்து ஏதும்தெரியாது என போலீசார் கருதுகின்றனர்.
ஷ்ேரசிங் ராணா பலமுறை பூலனின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாகவும், பூலனுக்கு அவர் மிகவும் தெரிந்த நபர்தான் எனவும் கூறப்படுகிறது.
பூலன் உடல் தகனம்:
கொலை செய்யப்பட்ட பூலன்தேவியின் உடல் வியாழக்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூரில்பலத்த பாதுகாப்புக்கு இடையே தகனம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் போராட்டம்:
தங்களது கட்சியைச் சேர்ந்த பூலன்தேவி எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்றத்தைநடத்தவிடாமல் போராட்டம் நடத்துவோம் என சமாஜ்வாடிக் கட்சி அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications