ஸ்டாலின் நண்பர் ரமேஷ் குடும்ப மர்மச் சாவு: போலீசிடம் வலையில் 2 பெண்கள்
சென்னை:
மேயர் ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில் 2 புதிய பெண்கள் சிக்கியுள்ளனர்.
கடந்த 16-ந்தேதி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் ரமேஷ்.
இது தொடர்பாக பலர் விசாரிக்கப்பட்டு வந்த போதிலும் தற்போது இந்த விவகாரத்தில் இப்போது 2 பெண்கள்விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (வெள்ளிக்கிழமை) ரமேஷ் தற்கொலை சம்பந்தமாக ஒரு பெண்ணை போலீசார் காவல நிலையம் அழைத்துவந்தனர்.
ரமேசின் செல்போனில் பதிவாகி இருந்த போன் நம்பர்களை வைத்து, அவருக்கு நெருக்கமானவர்கள் யார் யார்என்று போலீசார் அறிந்தனர். இதில் சென்னைத் தொழிலதிபர் ஒருவரின் மகள் சிக்கினார்.
இவர ரமேசுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார்.
இந்தப் பெண்ணை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து கிட்டத்தட்ட 4 மணி நேரம்போலீசார் துறுவித் துறுவி விசாரணை நடத்தினார்கள்.
ஆனால், அந்தப் பெண் யார் என்பது பற்றியும், விசாரணையில் நடந்தது என்ன என்பது பற்றியும் போலீசார் தகவல்தர மறுத்து விட்டனர்.
நாம் விசாரித்ததில் அந்தப் பெண் ஒரு தொழிலதிபரின் மகள் என்றும், அவர் ஒரு கல்வி நிலையத்தை நடத்திவருகிறார் என்றும் தெரியவந்தது. இவைதான் முதல் பெண் பற்றி தற்போது கிடைத்துள்ள தகவல்கள்.
இரண்டாவது பெண்:
இந்த வழக்கில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் இரண்டாவது பெண் புவனேஸ்வரி. மலையாளப்பெண்ணான இவர் ஸ்டாலின் மற்றும் ரமேஷ் இருவருக்குமே நெருக்கமானவர்.
இவருக்கும் ரமேஷ் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.
இதை புவனேஸ்வரியே ஜூனியர் விகடனுக்கு அளி"த்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். இவர் அளித்தபேட்டியில்,
நான் செல்போன் பில்களுக்கு கட்டணம் வசூலித்துக் கொடுக்கும் கம்பெனியை நடத்தி வருகிறேன். அந்த வகையில்சென்னையில் ஏராளமான முக்கியஸ்தர்களைத் தெரியும். அப்படித்தான் ரமேசும், ஸ்டாலினும் எனக்குபழக்கமானார்கள்.
ஆரம்பத்தில் பிஸினஸ்ரீதியாக ஆரம்பித்த நட்பு, குடும்ப நட்பாக மலர்ந்தது.
ரமேசின் மனைவி காஞ்சனாவும் நானும் தெய்வ பக்தியுடையவர்கள்.
நரங்கள் 2 பேரும் வாராவாரம் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதுண்டு.
பணக்கஷ்டம் ஏற்பட்டால் நான் ரமேசிடம் கடன் கூட வாங்குவதுண்டு.
ரமேஷ் தலைமறைவானதையடுத்து எங்களுக்குள் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அவர் இறந்த அன்றுநாங்கள் பழநியில் இருந்தோம். இங்கு வந்த பின் ரமேஷின் தம்பி ரமணன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.
உடனே நான் அவர் வீட்டுக்குச் சென்று பிரேதங்களை எடுப்பது வரை அவரது குடும்பத்திற்கு உதவியாய்இருந்தேன். இதையெல்லாம் கொச்சைப்படுத்தும் வகையில் போலீ"ஸ் என்னை இந்தத் தற்கொலையோடு முடிச்சுப்போடப் பார்க்கிறது.
விசாரணைக்கெல்லாம் பயந்து ஒளிபவள் நானல்ல என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். தான் ஒரு திமுக அனுதாபிஎன்றும் கூறியுள்ளார் புவனேஸவரி.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை











Click it and Unblock the Notifications