திரும்ப வந்த ராமதாசுக்கு பா.ஜ.கவில் கடும் எதிர்ப்பு: அமைச்சர் பதவி கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு பாரதீய ஜனதாகட்சியின் தேசியத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் பிரதமர் வாஜ்பாய் தான் பாட்டாளி மக்கள் கட்சியை தனதுகூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.

ஆனால், பாரதீய ஜனதா கட்சிக்கு இதில் கொஞ்சம் கூட மகிழ்ச்சியில்லை என்பதை ஜனா. கிருஷ்ணமூர்த்திதெளிவுபடுத்திவிட்டார். இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடந்த தேசிய பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள்கூட்டத்தில் ஜனா. கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

கூட்டணியைவிட்டு நினைத்தால் வெளியே போவது, நினைத்தால் உள்ளே வருவது என்று சில கட்சிகள் செயல்பட்டுவருகின்றன. இது போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பா.ஜ.க. விரும்பவில்லை. இதை மத்தியஅரசு (வாஜ்பாய்) உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது மேடையில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்களும்அமர்ந்திருந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸ் கட்சியும் தேசிய ஜனனாயகக்கூட்டணியில் சேர முயல்கிறது. இந் நிலையில் தான் தனது கோபத்தை ஜனா. கிருஷ்ணமூர்த்தி வெளிப்படையாகத்தெரிவித்துள்ளார்.

இதனால், மம்தாவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து வாஜ்பாய் யோசித்துத் தான் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.பா.ஜ.கவில் வெளிப்படையாகவே ராமதாசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மத்தியஅமைச்சர் பதவி ஏதும் கிடைக்காது எனவும் தெரிகிறது.

அதிமுகவிலிருந்து தாவி மத்திய அரசுக் கூட்டணிக்கு போய் தனது கட்சிக்கு மீண்டும் அமைச்சர் பதவியைப்பெற்றுவிடலாம் என்ற ராமதாசின் கனவை கலைத்துவிட்டது பா.ஜ.க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+