முதிய பெண்களுக்கு புதிய ரயில் கட்டண சலுகை
என் வாழ்வின் குறிக்கோள்- ராணா பேட்டி:
டோராடூன் பிரஸ் கிளப்பில் தங்களை ராணா சந்திக்கப் போவதாகக் கருதி ஏராளமான நிருபர்களும், புகைப்படநிருபர்களும் வெள்ளிக்கிழமை 10.45 மணிக்குக் குவிந்தனர்.
ஆனால், அதற்கு முன்னரே பிரஸ் கிளப்பில் வைத்தே ராணாவை போலீஸ் கைது செய்துவிட்டது.
போலீசாரால் இழுத்துச் செல்லப்படும் முன் அவரிடம் சில நிருபர்கள் பேசினர்.
அவர்களிடம் ராணா கூறுகையில்,
பிமாயில் எனது ஜாதியைச் சேர்ந்த 21 ஆண்களை கொள்ளைக்காரி பூலன்தேவி ஈவிரக்கம் இல்லாமல் சுட்டார்.அப்போது நான் சிறுவனாக இருந்தேன். பெரியவன் ஆனவுடன் பூலன்தேவியை சுட்டுக் கொல்ல சபதம்எடுத்திருந்தேன்.
இதையடுத்துத் தான் அவரைக் கொன்றேன். என்னுடன் கூட்டாளி ரவீந்தரும் சேர்ந்து தான் பூலனை சுட்டார்.
நான் 2 ரிவால்வர்களைக் கொண்டு பூலன் தேவியை சுட்டேன். ரவீந்தர் நாட்டு துப்பாக்கியால் சுட்டார். பின்னர்அங்கிருந்து தப்பி ஓடிவந்துவிட்டோம்.
முன்னதாக கொலை நடந்த 25ம் தேதி காலை டெல்லியில் உள்ள பூலன்தேவி வீட்டுக்கு விஜய்குமார் கஷ்யப்,அவரது மனைவி உமா ஆகியோருடன் டேராடூனில் இருந்து எனது காரில் சென்றேன். மூவரும் பூலன்தேவியைசந்திக்க டேராடூனில் இருந்து வந்ததாகக் கூறினோம்.
எங்களுடன் பூலன்தேவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும், என்னிடம்கார் இல்லை. உங்கள் காரில் என்னை நாடாளுமன்றத்தில் விட முடியுமா எனக் கேட்டார்.
இதையடுத்து நான் எனது காரில் தான் அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தேன்.
வழியில் பஸ் ஸ்டாண்டில் தயாராகக் காத்திருந்த என் கூட்டாளி ரவீந்தரையும் அழைத்துக் கொண்டு பூலன்தேவிவீட்டுக்கு வந்து அவரது வீட்டு வாசலில் காத்திருந்தேன்.
பிற்பகல் உணவுக்காக இன்னொரு எம்.பியின் காரில் பூலன் தேவி வந்திறங்கினார். வீட்டு வாசலை அவர்அடைந்தபோது எங்கள் காரில் காத்திருந்த நாங்கள் இறங்கி சுட்டுவிட்டுத் தப்பினோம்.
என் வாழ்வின் ஒரே குறிக்கோள் பூலன்தேவியைக் கொல்வது மட்டும் தான். அதை செய்துமுடித்துவிட்டேன்.இதற்காக பெரிய பிளான் எல்லாம் போடவில்லை. ஆனால், சரியான சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இவ்வாறு ராணா கூறினார். ராணாவின் கூற்றுப்படி அவருடன் ரவீந்தர் என்ற ஒரு கூட்டாளி மட்டும் தான்இருந்ததாகக் கூறுகிறார்.
ஆனால், டெல்லி போலீசார் ராணாவுடன் 2 பேர் இருந்ததாகக் கூறுகின்றனர். இவ் விஷயத்தில் இன்னும் குழப்பம்நீடிக்கிறது.
இப்போது ராணா டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications