திரிபுரா: 4 ஆர்.எஸ்.எஸ். பணயக் கைதிகள் சுட்டுக் கொலை
அகர்தலா:
திரிபுராவில் பணயக் கைதிகளாக இருந்த 4 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இவர்கள் தொடர்ந்து பணயக் கைதிகளாகவே இருந்து வந்தனர். ஆனால், இப்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த நால்வரும்சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்ட விவரத்தை மாநில உள்துறை அமைச்சகம் இவர்களின்குடும்பத்தாருக்கு சமீபத்தில் தெரிவித்தது.
ஆனால், அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த விவரம் ஏதும் இல்லை. வங்கதேசத்தில் உள்ள தங்களதுமுகாமில் வைத்து இந்தத் நால்வரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறது.
கொல்லப்பட்ட நால்வரும் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர்கள். திரிபுராவில்
ஆர்.எஸ்.எஸ்சின் பனாபாசி கல்யாண் ஆஷ்ரம் சமிதி நடத்தி வரும் மலைவாழ் மக்களுக்கான பள்ளிக்கு இவர்கள் சென்றபோதுகடத்திச் செல்லப்பட்டனர்.
இவர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும் தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான அத்வானிராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆண்டு அத்வானியே கடத்தல் நடந்த பகுதிக்குச் சென்று, அவர்களை மீட்கஅனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார்.
ஆனால், ராணுவம், போலீசாரின் முயற்சிகளையும் மீறி இந்த நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications