பா.ம.க. வந்தால்... விலகுவோம்: வி.சிறுத்தைகள்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாட்டாளி மக்கள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்தால், கூட்டணியிலிருந்து விலகி விட வேண்டும்என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்கள் அதன் தலைவர் திருமாவளவனுக்கு தீவிர கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையடுத்து ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால், நான் விலகிவிடுவேன் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

பல்டி பா.ம.க. இப்போது அதிமுகவிலிருந்து திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரகடுமையாக முயல்கிறது. ஆனால், இதற்கு கூட்டணியில் உள்ள தலித் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகளும், புதியதமிழகமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்த எதிர்ப்பைக் கண்டு அசந்துபோன திமுகவும் இப்போது பா.ம.கவை சேர்க்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டது. திமுகவுக்குப் பிடிக்காத பா.ம.கவை பாரதீய ஜனதாவும் ஒதுக்கிவிட்டது.

ஆனால், தன் மானம் காக்க அதிமுகவிலிருந்து விலகியதாகக் கூறிய ராமதாஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்சேர்ந்துவிட்டதாக அறிவித்துவிட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

பா.ம.கவை இன்னும் கூட்டணியில் சேர்க்கவில்லை என பா.ஜ.க., திமுக இரண்டும் தெளிவாகக் தெரிவித்துவிட்டன.ராமதாஸ் என்னை வந்து பார்க்கட்டும், அப்புறம் யோசிக்கலாம் என கருணாநிதி கூறிவிட்டார்.

இதனால், அவசரப்பட்டுவிட்ட சோகத்தில் ஆழ்ந்துள்ள பா.ம.க. எப்படியாவது தே.ஜ. கூட்டணிக்குள் நுழையமுயன்று வருகிறது.

இந் நிலையில் ராமதாஸை கடுமையாக விமர்சித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவசரஅவசரமாக பாண்டிச்சேரியில் தனது கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தைக் கூட்டினார்.

இன்று (திங்கள்கிழமை) நடந்த இக் கூட்டத்தில் பேசிய பலரும் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேரவிடக் கூடாது. அப்படி அந்தக் கட்சி சேர்க்கப்பட்டால், நாம் அந்தக் கூட்டணியில் ஒரு வினாடி கூட இருக்கக்கூடாது என்று கூறினர்.

மேலும் இந்தக் கூட்டணியில் இருந்து விலகும் பட்சத்தில் திமுக ஆதரவில் வென்ற 2 எம்.எல்.ஏ. பதவிகளையும்தூக்கி எறிந்துவிட வேண்டும் என தொண்டர்கள் திருமாவளவனிடம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தொண்டர்களும், நிர்வாகிகளும் இதே கருத்தைத் தான் வலியுறுத்தினர்.

தொண்டர்களின் கருத்தைக் கேட்ட திருமாவளவன் கூட்டணிக்குள் ராமதாஸ் வந்தால் நான் விலகிவிடுவேன் என்றுகூட்டத்திலேயே அறிவித்தார்.

இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ராமதாஸ் நுழைவதில் பெரும் சிக்கல் உருவெடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+