ஐ.பி.எஸ். அதிகாரிகளை காப்பாற்ற ஜெ. தீவிர ஆலோசனை
சென்னை:
முத்துக்கருப்பன் உள்ளிட்ட ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அழைத்திருப்பது அரசியல்உள்நோக்கம் கொண்டது என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று முதல்வர் ஜெயலலிதாதலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
இவர்கள் 3 பேரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் எனதிமுகவினரால் குற்றம் சாட்டப்பட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழிவாங்கல்:
மத்திய அமைச்சர் மாறனின் வற்புறுத்தலின் பேரில், அவர்களைப் பழிவாங்கத்தான் மத்திய அரசு இந்தநடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதிமுக வட்டாரம் கருதுகிறது.
இவர்களை மத்திய அரசுப் பணிக்கு அழைப்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பது போன்றதாகும் என்றுஅதிமுக கூறுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் அவர்களை மத்தியஅரசுப்பணிக்கு அனுப்பவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று கூறி வரும் தமிழக அரசு இது தொடர்பாகமத்திய அரசின் கடிதத்துக்கு புதன்கிழமை பதில் கடிதம் அனுப்பும் என்று தெரிகிறது.
ஜெ. ஆலோசனை:
இதுகுறித்து இன்று (திங்கள்கிழமை) முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச்செயலாளர், மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில் மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்க சட்டத்தில் எதாவது இடம் இருக்கிறதா என்று அலசிஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
மத்திய அரசின் ஆணைப்படி அந்த அதிகாரிகளை அனுப்பி வைப்பது தமக்கு மானப் பிரச்சனை என்று ஜெயலலிதாகருதுகிறார்.
மோதலுக்கு மத்திய அரசும் தயார்:
இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநில அரசுகளின் ஒப்புதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்தியஅரசு அழைத்துக் கொள்ள சட்டத்தில் இடம் உண்டு என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் தமிழக அரசுடன் எந்தமோதலுக்கும் மத்திய அரசு தயாராக உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications