ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு காங். தலைவர் அறிவுரை
சென்னை:
ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய மாநில அரசுகள் பழிவாங்கக் கூடாது என்று முன்னாள் மத்தியஅமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நட்வர்சிங் கூறினார்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய நட்வர்சிங் கூறியதாவது,
ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய மாநில அரசுகள் பழிவாங்குவது கண்டனத்திற்குரியது.
அதேபோல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக சட்டத்தை மீறி நடக்கக் கூடாது என்றார்.
விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் பேசும்போது,தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்றுஜெயலலிதா தான் கூறவேண்டும் என்றார்.
இல.கணேசன் கருத்து:
காவல்துறை அதிகாரிகள் விவகாரம் குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி செயலாளர் இல.கணேசன் கூறியதாவது,
மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை மத்திய அரசு அழைத்துள்ளதில் எந்த தவறும் இல்லை. மத்திய அரசுக்குஅந்த உரிமை உள்ளது.
மாநில அரசு இதைப்புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசே விருப்பப்பட்டு அழைத்துள்ளதால் காவல்துறைஅதிகாரிகள் அதற்காகப் பெருமைப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்திருப்பதாக நான் கருதவில்லை என்றார்.
கருணாநிதி கைதில் தொடர்புடைய 3 அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு வாஜ்பாய் அரசு அழைத்துள்ளதுதமிழகத்தில் பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications