பா.ம.கவை கூட்டணியில் இன்னும் சேர்க்கவில்லை: பா.ஜ.க. விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் சேர்க்கப்படவில்லை என பாரதீய ஜனதா கட்சிதெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த வாரம் டெல்லிக்கு ஓடிய ராமதாஸ், பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார். தனது கட்சியை தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாஜ்பாயை சந்தித்துவிட்டு வெளியே வந்த ராமதாஸ், தானாகவே நிருபர்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்துவிட்டது என்றார்.

ஆனால், பா.ஜ.க. தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை. தன்னை ராமதாஸ்சந்தித்துவிட்டுச் சென்றது குறித்து மட்டும் திமுக தலைவர் கருணாநிதியுடன் வாஜ்பாய் உடனடியாகதொலைபேசியில் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதை முதலில் வரவேற்ற கருணாநிதி, தலித் கட்சிகள்எதிர்ப்புத் தெரிவித்ததால், பின் வாங்கிவிடடார். ராமதாஸ் இன்னும் என்னை சந்திக்கவில்லை. சந்தித்த பின்னர்தான் திமுக பொதுக் குழுவில் பேசி முடிவு செய்வோம் என்று கூறிவிட்டார்.

பா.ஜ.க. விளக்கம்:

இந் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை இன்னும் சேர்க்கவே இல்லை எனபாரதீய ஜனதா கட்சியும் அறிவித்துவிட்டது. முதலில் ராமதாஸை சேர்ப்பதில் பிரச்சனை இருக்காது என திமுகவும்பா.ஜ.கவும் கருதிவிட்டன.

ஆனால், தலித் எதிர்ப்பு கிளம்பியுள்ளதையடுத்து பா.ஜ.கவும் பா.ம.கவை கைவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

டெல்லில் நடந்த பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இன்று (திங்கள்கிழமை) சென்னைதிரும்பிய தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளரான இல. கணேசன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

பா.ம.கவை இன்னும் கூட்டணியில் சேர்க்கவேயில்லை. ஆனால், ராமதாஸ் தான் கூட்டணியில் சேர்ந்து விட்டதாகக்கூறி வருகிறார். இதற்கு அவர் தான் விளக்கம் தர வேண்டும்.

பா.ம.க. இப்போது திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது என்றார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+