கருணாநிதி, ஸ்டாலின் மீது 3 புதிய வழக்குகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த தி.மு.க. அரசு மீது மேலும் 3 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. முன்னாள் முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி, சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆற்காடுவீராசாமி ஆகியோர் மீது இந்த 3 வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கடந்த தி.மு.க. ஆட்சி மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுவருகின்றன. இதுவரை 14 ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மேலும் 3 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

ஆற்காடு வீராசாமி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார்மனு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா நகரில் பல ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும்,பினாமிகள் பெயர்ல் சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள நேப்பியார்பாலம் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தின்போது விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த நேப்பியர் பாலத்தைப் போன்றே, அதன் பக்கத்தில்இரண்டாவது பாலம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தமுறைகேட்டில் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டியதில் முறைகேடுகள் செய்ததாக சென்னை மாநகர மேயர்மு.க.ஸ்டாலினுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த 3 வழக்குகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தஇருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+