அதிர்ச்சி தந்த வாஜ்பாய்
டெல்லி:
கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கத் தவறிவிட்டேன், இதனால், பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றுபிரதமர் வாஜ்பாய் பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டத்தில் பேசியபோது முதலில் அவர் ஜோக் அடிக்கிறார் என்று தான்நினைத்திருந்தனர் கூட்டத்தில் இருந்தவர்கள்.
உடனே சில எம்.பிக்கள் வாஜ்பாயை நோக்கி ஓடினர். நீங்கள் விலகக் கூடாது என சிலர் கண்கலங்கினர். ஆனால்,அதைக் கண்டுகொள்ளாத வாஜ்பாய் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பாகிஸ்தான் அதிபருடன் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா தோல்வியடைந்ததாகக் கூறப்படுவதால்வெறுத்துப் போயிருந்தார் வாஜ்பாய். அடுத்து யூ.டி.ஐ. ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்பு இருப்பதாககூட்டணியில் உள்ள சிவசேனைக் கட்சியே குற்றம் சாட்டியது.
பிரதமர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளும், பிரதமருக்கு நெருக்கமான தலைவர்களும் ஊழலில் ஈடுபட்டுவருவதாக பல தரப்பிலும் புகார்கள் எழுந்து வருவதால் இனியும் பதவியில் நீட்டிப்பதில் அர்த்தமில்லை எனவாஜ்பாய் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இன்று பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டத்தில் எடுத்தவுடனேயே அதிரடியாகத் தான் பேசினார், என்னால் தேசியஜனநாயகக் கூட்டணியை சரியாக நடத்திச் செல்ல முடியவில்லை. பிரதமர் என்ற முறையில் இந்த விஷயத்தில் நான்தோற்றுவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. உடல் நலமும் சரியில்லை. நான் பதவி விலகுவது தான் சரி. இதனால்,விலகுகிறேன் என்று கூறிய வாஜ்பாய், இந்த முடிவில் மாற்றம் இருக்காது, அடுத்து என்ன செய்வது என்று கட்சிமுடிவு செய்யட்டும் என்று கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
வெளியே சென்றவர் நேராக தனது இல்லம் சென்றுவிட்டார்.
அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே சில நிமிடங்கள் ஆனது.பின்னர் சுதாரித்துக் கொண்டு பிரதமர் இல்லத்துக் ஓடினார் அத்வானி. அவருடன் மூத்த தலைவர்களும் சென்றனர்.
பிரச்சனை ஆரம்பித்தது எப்படி?
ஏற்கனவே பல புகார்களால் கடுப்புடன் கூட்டத்துக்கு வந்த பிரதமர் வாஜ்பாயிடம் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தஎம்.பியான மகேஸ்வர் சிங் கோபத்துடன் ஒரு கேள்வி கேட்டார்.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உங்களுக்கு கீழ் தான் அமைச்சராக உள்ளார்.தொலைத் தொடர்புத்துறைக்கான ஆலோசனைக் கமிட்டி அமைக்கும்போது பா.ஜ.கவை அவர் கண்டு கொள்ளவேஇல்லை.
வெறும் 3 எம்.பிக்களைக் கொண்ட ராம்விலாஸ் பாஸ்வான் 182 எம்.பிக்களைக் கொண்ட பா.ஜ.கவைகண்டுகொள்வதே கிடையாது. பா.ஜ.கவை மதிக்காமல் ஆட்சி நடக்கிறது... என்று பேசிக் கொண்டிருந்தபோதுவாஜ்பாய் எழுந்தார்.
பிரதமர் என்ற முறையில் எனது தோல்வி தான் அது.. கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து செல்ல முடியவில்லை.நான் விலகிக் கொள்கிறேன் என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications