யூ.டி.ஐ. ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு- சிவசேனை குற்றச்சாட்டு
டெல்லி:
யூ.டி.ஐ. ஊழல் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவர் பி.எஸ்.சுப்பிரமணியம் பல முறை பிரதமர் அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என சிவசேனைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அதுவும் நாடாளுமன்றத்திலேயே சஞ்சய் நிரூபம் பிரதமர் அலுவலகம் மீது குற்றம் சாட்டிார். தனது குற்றச்சாட்டில்அவர் கூறியதாவது:
பதவ நீக்கம் செய்யப்பட்ட பி.எஸ். சுப்பிரமணியம் ஜூலை 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை மும்பையிலிருந்துமூன்று முறை டெல்லியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதில் 2 முறை பிரதமர் அலுவலகத்தைத்தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதில் ஒருமுறை பிரதமருக்கு மிக நெருக்கமான நபர் ஒருவருடன் சுப்பிரமணியம் பேசியுள்ளார். அந்த நபர்மத்தியத் திட்டக் கமிஷனில் உறுப்பினராக உள்ளார்.
கடந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மத்திய நிதித்துறை செயலாளர்சுப்பிரமணியத்தை பல முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிலைமை இப்படியிருக்க சுப்பிரமணியத்தின்நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என பிரதமர் அலுவலகமும் நிதியமைச்சரும் சொல்வதை நம்பமுடியவில்லை.
இந்த விவகாரம் குறித்து நான் பலமுறை பிரதமரிடமும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடமும் விளக்கம்கேட்டேன். ஆனால், அவர்களிடமிருந்து உருப்படியாக எந்த பதிலும் வரவில்லை.
கூட்டணியில் உள்ள கட்சியின் உறுப்பினரையே பிரதமர் இப்படி நடத்தியது கடும் கண்டனத்துக்குறியது.
தனியாகக் கேட்டு விளக்கம் கிடைக்காததால் தான் நாடாளுமன்றத்தில் எல்லோர் முன்னிலையிலும் இதை நான்வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசை ஆதரிக்கிறோம் என்பதற்காக அவர்கள் எதைச் செய்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் என்னமுடிவெடுத்தாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யூ.டி.ஐயில் பல லட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள்.அவர்களின் முதலீட்டுக்கு அரசு தான் பதில் சொல்ல வேண்டும். ஊழல் நடந்தால் அதைத் தட்டிக் கேட்கசிவசேனைக்கு உரிமை உண்டு.
இவ்வாறு சஞ்சய் நிரூபம் கூறினார்.
சிவ சேனை உறுப்பினரின் இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உள்ளஎம்.பிக்கள் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
சிவசேனையின் இந்தக் குற்றச்சாட்டையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் கடும்அமளியில் இறங்கியுள்ளன.
நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ராஜ்யசபாவில் இன்று இது குறித்து விளக்கம் அளித்தார். பங்குச் சந்தையில்ஏற்பட்ட தேக்கத்தினால் தான் யூ.டி.ஐயின் பங்கு விலையும் சரிந்தது. இதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்றார்.
ஆனால், சின்ஹாவின் விளக்கத்தை ஏற்காத எதிர்க் கட்சிகள், அவரை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரிவலியுறுத்தின.
எதிர்க் கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications