ஒரு நாளில் 200 பெண்கள்...

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 பெண்கள் விபசாரத்தில்ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய பெண்கள் கமிஷன் தலைவிவிபா பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளை விற்பதிலிருந்து காப்பாற்றுவதற்கான ஆலோனைக் கூட்டம்வியாழக்கிழமை டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதில் இருந்தும் 30அமைப்புகள் கலந்து கொண்டன. அந்த கூட்டத்தில் பேசும் போது விபா பார்த்தசாரதிஇந்த தகவலை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், விபசாரத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வறட்சியால்பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள்தான்.

மேலும் ஆடம்பர பொருட்களின் விளம்பரத்தால் கவரப்படும் பெண்கள் அந்தபொருட்கள் மோகம் கொண்டு அவற்றை வாங்குவதற்காக பகுதி நேர தொழிலாகவிபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

பெருகிவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் விபசாரம் அதிகரிக்க ஒருகாரணமாகும் என்றார்.

இந்த நிகழ்ச்சியை தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் ஜே.எஸ் வர்மா துவக்கிவைத்து பேசினார். அவர் கூறுகையில் இந்த சமூதாய சீர்கேடு தடுக்க முடியாமல்இருப்பதற்கு ஒரு காரணம், அரசியல்வாதிகள் யாரும் இதை தடுக்க வேண்டும் என்றமுனைப்பு இல்லாமல் இருப்பதுதான்.

இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதில் இருந்து காப்பாற்ற சட்டத்தில்பல வழிமுறைகள் உள்ளன என்றார்.

டெல்லியில் இருக்கும் ஜாயின்ட் உமன்ஸ் ப்ரோக்ராம் (ஜே.வி.பி) என்ற அமைப்பும்,யுனிஃபம் (க்ஐஊஉ) என்ற அமைப்பும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஜே.வி.பி இயக்குனர் ஜோத்சனா சாட்டர்ஜி கூறுகையில், விபசாரத்தில்ஈடுபடுத்தப்படும் 40 சதவிகிதம் பெண்கள் கடத்தப்பட்டு விபசாரத்தில்ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றார்.

விபசாரத்தில் ஈடுபடும் 5 சதவிகிதம் பெண்கள் கற்பழிக்கப்பட்ட பின்பு வேறு வழிதெரியாமல் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

விபசாரத்தில் ஈடுபடும் இளம் பெண்களில் 10 சதவிகிதம் பேர் விபசாரிகளின்குழந்தைகள். 5 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியைச் சேர்ந்தவர்கள்என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+