வேறு எந்த அதிகாரியையும் அனுப்பத் தயார் என்கிறார் ஜெ.
சென்னை:
மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ள 4 உயர் போலீஸ் அதிகாரிகளையும் அனுப்ப மறுத்து மத்திய அரசுக்குதமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
ராஜகோபாலன் கடந்த திமுக ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்தார். அடுத்து அதிமுக ஆட்சிவந்தவுடன் அவரை போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குநராக நியமித்தது.
இதையடுத்து மத்திய அரசு, தேசிய பாதுகாப்புப் படை இயக்குநராக நியமித்திருக்கிறது. மேலும், அந்தப்பதவியிலிருந்த நிகில்குமார் ஓய்வு பெற்றதால் இப்போது காலியாக உள்ளதால், தமிழக அரசு அவரை உடனடியாகவிடுவிக்கவேண்டும என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தமிழக அரசு இது குறித்து பதில் ஏதும் சொல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் முத்துக்கருப்பன்உள்ளிட்ட மேலும் 3 அதிகாரிகளையும் மத்திய அமைச்சகப் பணிக்கு அனுப்பி வைக்க மத்திய அரசுஉத்தரவிட்டிருந்தது.
இவர்கள் 3 பேரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது சம்பவத்தில் தொடர்புடையவர்கள். இந்த 3அதிகாரிகளும் அப்போது அத்துமீறி நடந்து கொண்டதாக கருணாநிதி உட்பட பல திமுகவினர் குற்றம் சாட்டிவந்தனர்.
இதனால் அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசு இந்த 3 அதிகாரிகளையும் கேட்கிறது என்று ஜெயலலிதாகூறினார். மேலும், தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு உண்மையானகாரணங்களைக் கூறவேண்டும் என்றும் ஜெயலலிதா கூறிவந்தார்.
மேலும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இது குறித்து தங்களது கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்குமாறுஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதில் இந்த 4அதிகாரிகளையும் விடுவிப்பதில் தாமதப்படுத்துவது ஏன் என்று விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வியாழக்கிழமை மத்திய அரசுக்கு தமிழக அரசின் பதில் கடிதம் அனுப்பப்பட்டது. தமிழக உள்துறைசெயலாளர் நரேஷ் குப்தா அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசுப்பணிகளில் நீடிக்க வேண்டிய அவசியம் இந்த 4 அதிகாரிகளுக்கும் தற்போது உள்ளது.
மத்திய அரசுப் பணிக்கு வருமாறு முத்துக்கருப்பனுக்கு, முன்பு ஒருமுறை அழைப்பு வந்தபோது, அவர் அதைநிராகரித்து விட்டார். மற்றொரு முறை, தன்னுடைய விருப்பமின்மையையும் தெரிவித்துள்ளார். அடுத்த 5ஆண்டுகளுக்கு அவரை மத்திய அரசுப் பணிக்கு அழைக்க முடியாது.
ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோருக்கு மத்திய அரசுப் பணிக்குச் செல்வதற்கான தகுதி இல்லை. அதனால்அவர்களையும் மத்திய அரசு அழைக்க முடியாது.
மேலும் மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த திடீர் முடிவுக்கான காரணத்தையும் மத்திய அரசுஉடனடியாக விளக்க வேண்டும்.
மேலும், ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி. போன்ற அந்தஸ்துகளில் உள்ள சில அதிகாரிகளை வேண்டுமானால்அழையுங்கள்; அனுப்பி வைக்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேட்டதற்குஅதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications