எல்லைப் பகுதிகளில் பாக். உளவு விமானங்கள்
ஜெய்சால்மர் (ராஜஸ்தான்):
பாகிஸ்தானின் ராணுவ உளவு விமானங்கள் ராஜஸ்தான் பகுதியில் வேவு பார்ப்பதாக ராஜஸ்தானின் எல்லைபாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆக்ரா உச்சி மாநாடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பின்பு ராஜஸ்தானை ஒட்டியுள்ள நன்சனா மற்றும்கிருஷ்ணதார் பால்ஜ் போன்ற பகுதிகளில் பாகிஸ்தான விமானங்கள் வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த விமானங்களில் நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இந்திய எல்லைப் பகுதியை புகைப்படம்எடுத்து வருகின்றன.
இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளையும், பி.எஸ்.எப். எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும்கவனிப்பதற்காக இந்த உளவு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் இந்திய எல்லைக்குள் எளிதாக நுழைய வாய்ப்புள்ளதா என்பது பற்றியும்,இந்தியப் பகுதிக்குள் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் தீவிரமாகவேவு பார்த்து வருகின்றன இந்த உளவு விமானங்கள்.
இந்த உளவு விமானங்கள், பகல் நேரங்களில் கூட, எல்லைப் பகுதியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்குஇந்திய வானில் பறந்து செல்கின்றன என்றார் அந்த அதிகாரி.
இந்த உளவு விமானங்கள் முழுக்க முழுக்க ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications