காஷ்மீரில் 15 கிராம மக்கள் சுட்டுக் கொலை
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை 15 கிராமத்தினரை சுட்டுக்கொன்றனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரையும் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்றுஅவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 15 பேர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. 3 பேர் தீவிரவாதிகளிடமிருந்து தப்பிவிட்டனர்.
இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. காயமடைந்த 4 பேரும் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொல்லப்பட்ட அனைவரும் இந்துக்கள்.
ஜம்மு -காஷ்மீர் ஆளுனர் சக்சேனா, விமானத்துறை இணை அமைச்சர் சமான் லால்குப்தா, டி.ஜி.பி. அசோக் சூரி மற்றும் ஜம்மு பகுதியின் ஜ.ஜி. ராமு ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ராணுவவீரர்கள்தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த படுகொலை சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும்பொறுப்பற்ேகவில்லை என்றார்.
இந்த கிராமம் மிகவும் உள்ளடங்கிய கிராமம்.இந்த கிராமத்தை சென்றடைய சரியானசாலையும் கிடையாது. பேருந்தும் கிடையாது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் 1பெண், 1 குழந்தை உட்பட 9 பேரைதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications