நடிகர் ராஜ்குமாரை மீட்ட டாக்டர் பானுவுக்கு ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் இருந்து பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்த டாக்டர் பானு, தனக்குகொலை மிரட்டல் வருவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் சென்ற ஆண்டு ஜுலை மாதம் கடத்திச் சென்று 108நாட்களுக்கு பின் விடுதலை செய்தான்.

பழ. நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழு வீரப்பனுடன் பேசி ராஜ்குமாரை மீட்டு வந்தனர். ராஜ்குமாரை மீட்கும்முயற்சியில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுபவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பானு.

ராஜ்குமாரும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது டாக்டர் பானுவை அறிமுகப்படுத்தி அவரை சக்திதேவி என்று புகழ்ந்து பாராட்டினார்.

தற்போது பானு தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது:

என் உயிரை பணயம் வைத்து தான் ராஜ்குமார் உயிரை மீட்டு வந்தேன். அவர் ஒருவருடைய உயிரை மட்டுமல்ல,தமிழ்நாடு - கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராமானவர்களின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறேன்.

நான் காட்டுக்குச் சென்றது அதுதான் முதல்முறை. எனக்கும் விடுதலை புலிகளுக்கும் தொட்ர்பு இருப்பதாககூறுவதும் தவறு.விடுதலை புலிகள் அமைப்பில் கேப்டன் பானு என்று ஒருவர் இருந்தார். அவரும் இறந்து விட்டார்.

என்னை பலர் பாராட்டுவது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெயரையும்,புகழையும் நான் தட்டிப் பறித்துவிட்டதாக நினைத்து எனக்கு எதிராக அவதூறாாக தகவல் பரப்பி வருகிறார்கள்.என்னை கொலை செய்வதாகவும் மிரட்டி வருகின்றனர். என் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

காட்டில் எந்த மாதிரி நிலை இருந்தது, அங்கு என்ன நடந்தது என்பது என்னுடன் மீட்பு பணியில் என் பங்கு என்னஎன்பது ராஜ்குமாருக்கு தெரியும். புகழுக்காக எதையும் செய்யத் துணிந்த சிலர் எனக்கு எதிராக கிளம்பி உள்ளதுஎனக்கு வேதனை அளிக்கிறது என்றார் டாக்டர் பானு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+