கருணாநிதி கைது கேசட்: தியேட்டர்களில் திரையிட சென்சார் போர்டு மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கு தமிழக சென்சார்போர்டு அனுமதிக்க மறுத்துள்ளது.

சென்னை மேம்பால ஊழல் வழக்கில், கடந்த ஜூன் 30-ந் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுசெய்யயப்பட்டார். அப்போது கருணாநிதியிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர் என்று திமுக வினர்கூறினர்.

திமுகவின் ஆதரவாளர்களான சன் டி.வி. நிறுவனத்தினர், கைது சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோகேசட்டை ஒளிபரப்பினர். இந்நிலையில் அந்தச் சம்பவத்தைப் போலீசார் எடுத்த வீடியோ கேசட் ஜெயா டிவியில்ஒளிபரப்பப் பட்டது. இந்த 2 கேசட்களிலும் பல வேறுபாடுகள் இருந்ததால் காண்பவர்கள் எது உண்மை எது பொய்என்ற குழப்பத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் எடுத்த கேசட்டை அனைத்து கிராமங்களிலும் கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பவேண்டும் என்று மாவட்டக் கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தக் கேசட்டில் முதல்வர்ஜெயலலிதாவே, போலீசார் கடமை மீறவில்லை என்று விளக்கிப் பேசியிருக்கிறார்.

மேலும், கருணாநிதிக்கு கைது செய்யப்பட்ட பின்பு கையில் வலி ஏற்பட்டுள்ளது என்பது பொய். அவர் ஒருபத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தனக்கு ஏற்கனவே கையில் வலி இருப்பதாகக் கூறியுள்ளார் என்றும்ஜெயலலிதா கூறுகிறார்.

இந்நிலையில், இந்தக் கேசட்டை டாக்குமெண்ட்ரி படம்போல தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்குமுன்காண்பிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக, தமிழக அரசின் சென்சார் போர்டை அணுகியது.

ஆனால், கருணாநிதி கைது வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், மேலும் இது பற்றி ராமன் கமிஷன் விசாரணையில்இருப்பதாலும், இதற்கு அனுமதி வழங்க சென்சார் போர்டு மறுத்து விட்டது. மேலும், இந்தக் கேசட்டைதிரையிடுவதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் போர்டு கருதுவதாகத் தெரிகிறது.

மத்திய மாநில அரசுகளின் உறவு தொடர்பான விசயம் என்பதால், இந்தக் கேசட் பற்றி நான் எதுவும் கூறமுடியாதுஎன்றார் சென்ஸார் போர்டு அதிகாரி ராஜு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+