முன்னாள் அமெரிக்க தூதர் தமிழக ஆளுநராகிறார்?
சென்னை:
முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த நரேஷ் சந்திரா, தமிழக ஆளுநராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.
ஆனால் அவர் அனுப்பிய தகவல்களால் மத்திய அரசு திருப்தி அடையவில்லை. இதையடுத்து, பாத்திமா பீவியைஆளுநர் பதவியிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் பாத்திமா பீவி தானாகவேமுன்வந்து ராஜினாமா செய்துவிட்டார்.
இதையடுத்து ஆந்திர மாநில ஆளுநராக உள்ள ரங்கராஜன், தற்போது தமிழக ஆளுநர் பதவியையும் கூடுதலாகக்கவனித்து வருகிறார்.
இந்நிலையில், யாரைத் தமிழக ஆளுநராக நியமிப்பது என்ற யோசனையில் மத்திய அரசு இருக்கிறது. இதற்காகப்பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. முதலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் பைரோன் ஷெகாவத்மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சிக்கந்தர் பக்த் ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.
ஆனால் ஷெகாவத், தான் முழு நேர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் தம்மால் ஆளுநர் பதவியை ஏற்க இயலாதுஎன்று கூறிவிட்டார். சிக்கந்தர் பக்த் மீது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில் முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த நரேஷ் சந்திரா பெயரும் அடிபடுகிறது. இவர் மீதுயாருக்கும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. மேலும் இவர் ஒரு சிறந்த நிர்வாகி. இதனால் இவரே தமிழகஆளுநராகும் வாய்ப்பு இப்போது அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications
