இந்துக்கள் படுகொலைக்கு ஹுரியத் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஷ்மீரில் இந்துக்கள் 17 பேர் கொல்லப்பட்டதற்கு காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஹுரியத் மநாடுஅமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு காஷ்மீர் தீவிரவாதிகள் தோடா மாவட்டம் சரோதிதார் கிராமத்திற்குள் பயங்கரஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்த 21 இந்துக்களை அவர்கள் கடத்திச் சென்றனர்.

அவர்களை அருகில் இருந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற தீவிரவாதிகள் அவர்களை வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டனர். அதில் 17 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அந்த கிராமம் உள்ளடங்கியது. அந்த கிராமத்தை அடைய பஸ் வசதியும் கிடையாது. அதனால் காயமடைந்தவர்கள்ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டு அமைப்பு இந்த படுகொலையைகண்டித்துள்ளது.

சென்னையில் நடந்து வரும் தெற்காசிய அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள ஹுரியத் மாநாட்டுஅமைப்பின் முக்கிய தலைவர்களான அப்துல் காலி லோன் மற்றும் மிர்வாஸ் ஃபரூக் ஆகியோர் கூறுகையில், இந்தபடுகொலை கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதியை விரும்பாத தீவிரவாதிகளின் சதிவேலை இது. இந்தசம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.காஷ்மீரில் மேலும்அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அங்கு சனிக்கிழமை இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுஉள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாரசிய ஜனதா கட்சியினரும், சிவேசேனை கட்சியினரும் ஜம்மு - காஷ்மீரில்ஃபரூக் அப்துல்லா அரசு கலைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+