உள்ளாட்சி தேர்தல்: தனித்து போட்டியிடுகிறது பா.ம.க.

Subscribe to Oneindia Tamil

சேலம்:

உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும்என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க., சமீபத்தில் அந்தகூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.

ஆனாலும் தமிழகத்தில் தி.மு.க.கூட்டணியிலான தே.ஜ.கூட்டணியில், பா.ம.க. சேர்த்துக் கொள்ளப்படுமா என்பதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தன்னை சந்தித்து பேசிய பின்பே முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல், தனித்து போட்டியிடும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. மீண்டும் இணைவது குறித்து, சென்ற மாதம் 31ம் தேதி டெல்லியில்பிரதமர் வாஜ்பாயை சந்தித்து அனுமதி கோரினேன். ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது பா.ம.கவின் நிலை குறித்தும் பிரதமரிடம் கூறினேன். அதன்பின் 2 நாட்கள் கழித்து யு.என்.ஐ.செய்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இணைந்து விட்டதாக செய்தி வந்தது. இதன்படி தேசியஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இணைந்து விட்டது என்றுதானே பொருள்.

அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டாலும். தமிழகத்தைப் பொறுத்தவரையில்கண்ணப்பன், திருநாவுக்கரசு போன்றவர்கள் கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஒரு சிலர் பா.ம.க. மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். எங்களை "வீடு கொளுத்தி" என்றுஇவர்கள் கொச்சைப்படுத்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். யார் "வீடு கொளுத்தி" என்பது மக்களுக்குத்தெரியும். இவர்களால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இணைவதில் தாமதம் ஏற்படுகிறது.

இது குறித்து உரிய நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுவேன். பொதுவாக எல்லாதேர்தலிலுமே தனித்து போட்டியிட வேண்டும் என்றுதான் பா.ம.க. தொண்டர்கள் விரும்புகின்றனர். இது பற்றிசெயற்குழு, பொதுக்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கும்.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்துதான் போட்டியிடும். தொகுதிக்கு ஏற்பவும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுவிரும்பும்போது, அனுப்பி வைக்க வேண்டியது மாநில அரசுகளுக்கு அழகு. இதை உணர்ந்து ஜெயலலிதாசெயல்பட வேண்டும்.

மதுக்கடை மூலம் அரசுக்கு ரூ.1,000 கோடி லாபம் கிடைக்கும் என்றால், கள்ளச்சாராயம் மூலம் போலீஸ் துறைக்குரூ.2,000 கோடி லாபம் கிடைக்கிறது.

போலீஸ் துறையில் சட்டம்-ஒழுங்கு சீர்பட வேண்டும் என்றால், விதிமுறைக்கு உட்பட்டு போலீஸ் சங்கம்அமைக்கப்பட வேண்டும். போலீசாருக்கு ஆசிரியர்களைக் காட்டிலும் அதிக சம்பளம் வழங்க வேண்டும். இதையும்மீறி சட்டம் ஒழுங்கு சீர் கெட்டால் சம்பந்தப்பட்ட போலீசாரை பதவி நீக்கம் செய்து விட வேண்டும் என்று கூறினார்ராமதாஸ்.

அவர் பேட்டியை முடித்த பின்னும் நிருபர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டனர். "பணத்துக்காகத்தான்ராமதாஸ் அடிக்கடி கட்சி மாறுகிறார் என்று வாழப்பாடி ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளாரே" என்று ஒரு நிருபர்கேட்டதும், ராமதாஸ் கோபத்தின் உச்சிக்கே போய், "எவனோ ஒருவன் சொல்வதை எல்லாம் என்னிடம்கேட்காதீர்கள்" என்றார்.

தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி பற்றி கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+