வங்கியில் அபாயச் சங்கு அலறல்: சென்னையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள ஒரு வங்கியில், திங்கள்கிழமை நள்ளிரவு தீ விபத்திற்கான அபாயச் சங்கு அலறியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் பரபரப்பு மிகுந்த அண்ணா சாலையில் உள்ளது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில்உள்ள தீ விபத்திற்கான அபாயச் சங்கு அலறியது.
இந்த அபாயச் சங்கு சர்க்யூட் மூலமாக, தீயணைப்பு அலுவலகத்துலுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதன்உதவியுடன் தீ அபாயத்தை அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக அந்த வங்கிக்கு விரைந்தனர்.
ஆனால், வங்கியில் தீ பிடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அபாயச் சங்கின் மின்னிணைப்பில் ஏற்பட்ட"ஷார்ட் சர்க்யூட்" காரணமாகத்தான், இந்த அது அலறியுள்ளது என்பது பின்னர் தெரிய வந்தது.
நள்ளிரவில் அண்ணா சாலையில் சங்கு அலறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications