மத்திய அரசு அழைப்பு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரிப்யூனலில் வழக்கு
சென்னை:
மத்திய அரசுப் பணிக்கு தங்களை மாற்றியதை எதிர்த்து சென்னை நகர போலீஸ் ஆணையர் முத்துக்கருப்பன்,இணை ஆணையர் ஜார்ஜ், துணை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோர் மத்திய நிர்வாக டிரிப்யூனலில்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுக்குப் பிறகு மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. முதலில்ஆளுநராக இருந்த பாத்திமா பீவியின் பதவி பறிபோனது. பின்னர், கருணாநிதியைக் கைது செய்த காவல்துறைஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் நடவடிக்கைக்குப் பதில் நீதிபதிராமன் கமிஷனை தமிழக அரசு அமைத்தது.
இந்நிலையில், கருணாநிதி கைதின் போது விமர்சிக்கப்பட்ட முத்துக்கருப்பன், ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன்ஆகியோரை மத்திய பணிக்கு திரும்ப வருமாறு கூறி மத்திய அரசு உத்தரவிட்டது.
இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களை அனுப்ப முடியாது என்று மத்திய அரசுக்குதமிழக அரசு கடிதம் அனுப்பியது.
இதையடுத்து 3 அதிகாரிகளையும் மற்றும் முன்னாள் டிஜிபி ராஜகோபாலன் ஆகியோரை நேரடியாக மத்தியபணியில் வந்து சேருமாறு கூறி உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு தயாரானது.
இந்தச் சூழ்நிலையில், 3 அதிகாரிகளும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாக டிரிப்யூனலில்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த முறை மத்திய பணி வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்து விட்டதால், முத்துக்கருப்பனுக்கு 5ஆண்டுகளுக்கு மத்திய பணியில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை முடிய இன்னும் 2 ஆண்டுகள்உள்ளன. எனவே அவரை மீண்டும் மத்திய பணியில் சேர உத்தரவிட முடியாது.
ஜார்ஜ் இப்போதுதான் பணியில் சேர்ந்துள்ளார். எனவே உடனடியாக அவரை மத்திய பணியில் சேருமாறுஉத்தரவிட முடியாது.
கிறிஸ்டோபர் நெல்சனின் ஐ.பி.எஸ். அந்தஸ்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அவர் மத்தியபணிக்குச் செல்ல இன்னும் தகுதி பெறவில்லை.
எனவே மத்திய அரசின் இந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை டிரிப்யூனல் தலைவர் நீதிபதி சுப்ரமணி மற்றும் உறுப்பினர்மாணிக்கவாசகம் முன்னிலையில் நடக்கிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications