மதுரையில் சிறுவன் கொலை; நகை-பணம் கொள்ளை
மதுரை:
மதுரையில், வீட்டிலிருந்த 14 வயது சிறுவனைக் கொன்று, நகை-பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப்போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பசும்பொன் நகரில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில், திங்கள்கிழமை பகல் நேரத்தில் புகுந்தது ஒருகொள்ளைக்காரக் கும்பல். உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அன்று விடுமுறை எடுத்திருந்தான் அந்தச்சிறுவன். அவனுடைய வீட்டினுள் புகுந்த கும்பல், நகை-பணத்தைக் கொடுக்குமாறு அந்தச் சிறுவனைமிரட்டியுள்ளது.
சிறுவன் மறுக்கவே, உடனே அவனைக் கழுத்தை நெறித்து அந்தக் கும்பல் கொன்று விட்டது. பிறகு, பீரோவில்இருந்த 30 பவுன் தங்க நகைகளையும் ரூ.35,000 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டது அந்தக்கும்பல்.
கொலை-கொள்ளை நடந்த அந்த நேரத்தில், அந்தச் சிறுவனின் பெற்றோர் எங்கோ வெளியில் சென்றுவிட்டதாகக்கூறப்படுகிறது. வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வீடும் காலியாகத்தான் இருந்துள்ளது. மாலையில் அந்தச் சிறுவனின்சகோதரி வந்து பார்த்த பிறகுதான், விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார், தீவிரவிசாரணை நடத்தினார்கள்.
இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக, 3 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களைத் தேடும் பணிமுடுக்கி விடப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications