ராமதாசுடன் பேச எனக்கு தகுதி இல்லை: திருமாவளவனின் கிண்டல்
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் நம்பத்தகுந்த கொள்கை உடையவர் அல்ல. அதனால் அவரைக்கூட்டணியில் சேர்க்கவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து சிலகாலம் எந்த முடிவையும் எடுக்காமலிருந்தது. அப்போதுமுதல் இன்று வரை பா.ம.க.வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று கூறிவருபவர்திருமாவளவன்.
ஆனால், பா.ம.க. தலைவர் ராமதாஸ் நேராக டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துக் கூட்டணியில்இணைந்து விட்டது. முதலில் முறையாக பா.ம.க இன்னும் கூட்டணியில் சேரவில்லை என்று சொல்லி வந்த பாரதீயஜனதா, ஒருவழியாக பா.ம.க வை இணைத்துக் கொண்டதாக ஒத்துக் கொண்டுள்ளது.
ஆனால், இந்தக் கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் திமுக இது பற்றி இன்னும் முடிவுசெய்யாமலிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் எதிர்ப்பு.
விடுதலைச் சிறுத்தைகள் விலகினால், திமுகவுக்கு இழப்பு தான் ஏற்படும், அதே நேரத்தில் பா.ம.க.வைச் சேர்ப்பதால்பா.ம.க மட்டும்தான் லாபமடையும் என்று திமுகவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருமாவளவனுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை. இருந்தாலும் அவருடன் பேசத் தயார் என்று ராம்தாஸ்கூறியிருக்கிறார்.
நம்பிக்கை துரோகம் என்ற கொள்கை எங்களுக்கு இல்லை. ஆனால், ராம்தாஸ் நம்பத் தகுந்த கொள்கைஉடையவர் அல்ல. அரசியல் ஆதாயத்திற்காக முதுகில் குத்தக் கூடியவர். எனவே, அவருடன் பேச நான் தகுதிஇல்லாதவன்தான்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க வைச் சேர்க்கவே கூடாது.
இது குறித்து திமுக தான் முடிவெடுக்க வேண்டும். பிரதமர் வாஜ்பாய், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் ஆகியோரது முடிவைவிட, திமுக தலைவர் கருணாநிதியின் முடிவு தான் எங்களுக்கு முக்கியம்.
திமுக வின் முடிவுக்குப் பின், எங்களது முடிவை நாங்கள் அறிவிப்போம்.
மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க, அரசாணை 44யை அமல்படுத்த மாநில அரசுமுன்வர வேண்டும்.
இந்த நாட்டில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில்நடக்கும் மாநாட்டில் எடுத்துக் கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications