திமுக பேரணிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருகிற ஆகஸ்ட் 12 -ந் தேதி சென்னையில் கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர்நடத்தவிருக்கும் கண்டனப் பேரணியைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது போலீசார் அத்து மீறி நடந்து கொண்டதாக திமுகவினர்கூறிவருகின்றனர். மேலும், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இந்தப் பேரணிகள் பலஇடங்களில் நடந்து வருகின்றன. அதுபோல சென்னையிலும் வரும் 12 -ந் தேதி பேரணி நடக்கிறது.

பேரணியின் போது போலீசாருடன் மோதலை ஏற்படுத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால்அந்தப் பேரணியைத் தடைசெய்யவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த சேக்பரீத் என்பவர் மனுசெய்துள்ளார்.

அவர் சார்பில் அவரது வக்கீல் ஆனையூர் மோகன்தாஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது போலீசார் அத்து மீறி நடந்து கொண்டதாக திமுகவினர்கூறிவருகின்றனர். இதனால் கண்டனப் பேரணியின் போது போலீசாருடன் கலகம் ஏற்படுத்தி சட்டம்ஒழுங்கைச்சீர்குலைக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக் கூறி 356 -வது பிரிவைப் பயன்படுத்திஆட்சியைக் கலைக்க உதவும் சூழ்நிலையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இந்த பேரணியைநடத்தத் தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+