தமிழகம் வருகிறார் சோனியா... இளங்கோவன் தகவல்
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விரைவில் தமிழகம் வரவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது:
தமிழகத்தில் மதுரை அல்லது திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டமும், பேரணியும்விரைவில் நடைபெறவுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ளவுள்ளார்.
பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கான தேதி விரைவில் வெளியிடப்படும். அதன் பிறகு சோனியாவின் வருகைஉறுதி செய்யப்படும்.
எனக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிருப்தியாளர்களின் போக்கு குறித்து நான் கவலைப்படவில்லை.அவர்களுக்கு இதைத் தவிர வேறு வேலை இல்லை.
அவர்களைப் பற்றி கட்சிக்கு பாடுபட்டதாக எந்தச் செய்தியும் இதுவரை வந்ததில்லை. என்னை நீக்க வேண்டும்என்று மட்டுமே அவர்கள் கூறி வருவது பத்திரிக்கைகளில் அவர்கள் குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால்தெரியும்.
அவர்களெல்லாம் கட்சி வளர்ச்சி பற்றி அவர்கள் கவலைப்பட்டதில்லை. காமராஜர் பிறந்தநாள் விழாக்களைஏற்பாடு செய்ததில்லை. போராட்டங்கள் எதிலும் பங்கேற்றதில்லை. இப்படி இருக்கையில் இவர்களது போக்குகுறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
யு.டி.ஐ. நிறுவன ஊழல் குறித்து மக்களிடையே விளக்கவும், இதற்கு பொறுப்பேற்று மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வியாழக்கிழமை யு.டி.ஐ. நிறுவன அலுவலகம் முன்புகாங்கிரஸ் சார்பில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ள அடைக்கலராஜ் (அதிருப்தியாளர்) உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும்அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. கூட்டணி குறித்து முடிவு செய்வதுஅதிமுகவின் கையில்தான் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் எங்களது கூட்டணி உறுதியாக உள்ளது.அக்கட்சியிடம் காங்கிரஸ் கட்சி அடகு வைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்றார் இளங்கோவன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications